‘வணக்கம் சென்னை’ .. சந்தானமே ஆரம்பிச்சு வப்பாராம்.. அவரே முடித்தும் வைப்பாராம்...!
சென்னை: கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'வணக்கம் சென்னை'. இப்படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது.
மிர்ச்சி சிவா ஹீரோவாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். காமெடியைக் கதைகளமாகக் கொண்டிருக்கும் இப்படத்தில் சந்தானத்திர்கு நல்ல வெயிட்டான ரோலாம்.
இதைப் பற்றி கிருத்திகா உதயநிதி கூறும்போது....

வாழவைக்கும் சென்னை...
வாய்ப்புகளின் தேசமான சென்னை, தன்னை நம்பி வருபவர்களை ஒரு போது கை விடுவதில்லை. இது தான் கதையின் அடைப்படை.

காமெடி பொழுதுபோக்குப் படம்...
தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வர்ற ஹீரோ சிவாவுக்கும், லண்டன்ல இருந்து சென்னைக்கு வர்ற ப்ரியா ஆனந்துக்கும் இடையே உருவாகும் மோதல், காதல், காமெடி தான் இந்த வணக்கம் சென்னை.

ஆரம்பமும், முடிவும்...
படத்தின் கதையை ஆரம்பித்து வைப்பதும், முடித்து வைப்பதும் சந்தானம் தான்' எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி

அடுத்து உதய் ஹீரோ...
மேலும், இப்படம் தன்னை நிச்சயம் ஜெயிக்க வைக்கும் எனவும், தனது ரெண்டாவது படத்தில் உதயநிதி தான் ஹீரோ என நம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் பேசுகிறார் கிருத்திகா உதயநிதி.

அனிருத், ஆண்ட்ரியா...
இப்படத்தில் உள்ள மொத்தப்பாடல்கள் 7. அதில் 5 பாடல்களை அனிருத் பாடி இருக்கிறாராம். காதல் வதந்திகளுக்குப் பிறகு, அனிருத், ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து ‘எங்கடி பொறந்த...' பாடியிருப்பது கூடுதல் சிறப்பு.


Click it and Unblock the Notifications











