ஆடை பட இயக்குநருடன் இணையும் சந்தானம்... விரைவில் அறிவிப்பு

சென்னை : நடிகர் சந்தானம் தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக இவர் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆடை பட இயக்குநரின் இயக்கத்தில் அடுத்ததாக சந்தானம் நடிக்கவுள்ளார்.

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் சின்னத்திரையில் பிரபலமான வீஜேவாக இருந்தவர். அப்போதே அவருக்கு ரசிகர்கள் ஏராளம். தொடர்ந்து பல ஷோக்கள், மேடை நிகழ்ச்சிகள் என தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சிம்புவின் மன்மதன் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

கவுன்டர் காமெடி

கவுன்டர் காமெடி

அடுத்தடுத்து காமெடியனாக பல படங்களில் நடித்துள்ளார். ஒரு கால கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது. ஹீரோவிற்கு நண்பனாக இவர் ஏற்று நடித்த படங்கள் அனைத்தும் வேற லெவல் ரகம். கவுன்டர் காமெடி செய்வதில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார்.

ஹீரோவாகும் ஆசை

ஹீரோவாகும் ஆசை

இவரது காமெடிக்கு என்று ஓடிய படங்களும் லிஸ்டில் உள்ளது. இந்நிலையில் இவருக்கு ஹீரோவாகும் ஆசையும் வர வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு, சபாபதி, டகால்டி, ஏ1, சக்கைபோடு போடு ராஜா, பாரீஸ் ஜெயராஜ் என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

ஏஜெண்ட் கண்ணாயிரம் படம்

தற்போது ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் துப்பறியும் நிபுணர் கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரத்னகுமார்

இயக்குநர் ரத்னகுமார்

இந்நிலையில் அடுத்ததாக சந்தானம் ஆடை, மேயாத மான் படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வசனகர்த்தாவாகவும் செயல்பட்டவர். இதனிடையே சந்தானம் -ரத்னகுமார் கூட்டணியின் அறிவிப்பு நாளைய தினம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X