அனுஷ்கா மேல ஆசையா?.. மூளையில இருந்து யோசிக்கிறீங்களா.. முதுகுல இருந்தா?.. சந்தானம் செம கலாய்!

சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சந்தானத்திடம் பத்திரிக்கையாளர்கள் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பினர். அதற்கு சந்தானம் செம ஜாலியாக பதில் அளித்தது அந்த நிகழ்ச்சியை சிரிப்பலையில் ஆழ்த்தியது.

பல வருடங்களுக்கு முன்னதாக நடிகர் சந்தானம் அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக சொல்லியதாக ஒரு பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் சோசியல் மீடியாவில் தற்போது தீயாக பரவி வருகிறது.

Santhanam trolls press people at Inga Naan Thaan Kingu press meet

சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், வரும் மே 10 ஆம் தேதி இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வெளியாகிறது.

அரசியலுக்கு வரப் போறீங்களா?: பத்திரிக்கையாளர் சந்திப்பு தொடர்ந்து இந்த ஒரு கேள்வியை அனைவரும் எழுப்பி வருகின்றனர். விஜய் மற்றும் விஷால் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த நிலையில் யாரைப் பார்த்தாலும் இந்த கேள்விகளுக்கு வருகின்றனர். நடிகை ஜோதிகாவிடம் இதே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் சந்தானத்தைப் பார்த்து கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த சந்தானம் ரஜினி சார் டயலாக் ட்ரெண்டான நிலையில் இந்தக் கதைக்கு தேவைப்பட்டது அதனால் அந்தத் தலைப்பை வைத்தோம். மத்தபடி அரசியலுக்கு வர ஆசை இல்லை எனக் கூறியுள்ளார்.

அனுஷ்கா மீது ஆசையா?: அனுஷ்காவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என சொல்லுங்கள், அதற்கு பதிலாக அனுஷ்கா மீது ஆசையா என ட்விஸ்ட் வைத்து கேள்வி எழுப்பினால் எப்படி? என்னை எதிலாவது கோர்த்து விட வேண்டும் அதுதான் உங்கள் ஆசையா என பத்திரிகையாளரை கலாய்த்துள்ளார். மேலும், அனுஷ்காவுடன் தெய்வத் திருமகள், ரெண்டு, வானம், சிங்கம் 2 என சில படங்களில் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை எனக் கூறியிருப்பேன். ஆனால், அதற்கான கதை அமைய வேண்டும் என்று பதில் அளித்துள்ளார்.

முதுகில் இருந்து யோசிப்பீங்களா?: பாடல்களில் பெண்களை கவர பிங்க் நிறத்தை அதிகம் பயன்படுத்தி உள்ளீர்களா என்கிற கேள்விக்கு சிரித்த சந்தானம் இந்த கேள்வி எல்லாம் மூளையில் இருந்து யோசிப்பீங்களா? அல்லது முதுகில் இருந்து யோசிப்பீங்களா? என கலாய்த்தபடியே ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளித்து அந்த நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்.

சத்குரு போன் போட்டு திட்டுவாரு: மேலும், ஆன்மிகம் குறித்த கேள்விக்கு ஜக்கி வாசுதேவ் பற்றி சந்தானம் பேசியதை குறிப்பிட்டு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சந்தானம், ஏதாவது கோர்த்து விட்டுடாதீங்க அப்புறம் சத்குரு போன் போட்டு திட்டுவாரு எனக் கூறியுள்ளார். அடுத்த வாரம் கவினின் ஸ்டார் படத்துக்கு போட்டியாக சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X