விஷால், சிம்பு, நயன்தாராவை ஒரே டிரெய்லரில் கலாய்த்த சந்தானம்.. ’இங்க நான் தான் கிங்கு’ எப்படி?

சென்னை: நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் அல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்பு அல்ல என ஆரம்பத்திலேயே வசனம் மூலமாக விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் கலக்கி இருக்கிறார் நடிகர் சந்தானம்.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில் இயக்குனர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலசரவணன், முனீஸ்காந்த், லொள்ளு சபா மாறன், மறைந்த நடிகர் லொள்ளு சபா சேசு உள்ளிட்ட பலர் நடிப்பின் உருவாகியுள்ள 'இங்க நான் தான் கிங்கு' திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Santhanam trolls Vishal Simbu and Nayanthara in Inga Naan Thaan Kingu trailer

இந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் மே 10 ஆம் தேதி இங்க நான் தான் கிங்கு படம் ரிலீசாக காத்திருக்கிறது.

கவின் உடன் போட்டி: விஜய் டிவியில் இருந்து வந்த சந்தானம் மற்றும் கவின் இருவரும் மே 10 ஆம் தேதி வெள்ளித் திரையில் போட்டி போட காத்திருக்கின்றனர். சந்தானம் நடித்துள்ள இங்கே நான் தான் கிங்கு திரைப்படமும் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் மே 10 ஆம் தேதி வெளியாகிறது.

இங்கே நான் தான் கிங்கு டிரெய்லர் ரிலீஸ்: ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள இங்கே நான் தான் கிங்கு படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். காமெடி படமாக உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் பிரச்சனை, நடிகர்களை கலாய்த்து வசனம் என டிரெய்லர் சிரிக்க வைக்கிறது.

நயன்தாராவை கலாய்த்து: டிரெய்லரின் ஆரம்பத்தில் சிம்பு மற்றும் விஷாலை நேரடியாக கலாய்த்து பேசும் சந்தானம், இவ்வளவு பிரம்மாண்டமாக திருமணம் நடத்துவீர்கள் என்று தெரிந்தால் நெட்பிளிக்ஸ்லையே ரிலீஸ் செய்வேனே என நயன்தாராவையும் மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

ஜாலியா பார்க்கலாம்: சம்மருக்கு குடும்பத்துடனும் நண்பர்களுடன் ஜாலியா சிரித்துக் கொண்டு பார்க்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்குப்பட்டி ராமசாமி போல இந்த படத்தின் காமெடி காட்சிகளும் க்ளிக் ஆனால், கல்லா கட்ட வாய்ப்புள்ளது. இந்த படத்துக்கு போட்டியாக வெளியாக உள்ள கவினின் ஸ்டார் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகிறதே தவிர ரசிகர்களை கவரும் விதமாக படங்கள் வெளியாகவில்லை என்கிற குற்றச்சாட்டை மே மாத ரிலீஸ் படங்கள் மாற்றுகின்றனவா என்பதை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X