Santhanam Net Worth: 45 வயதில் Next Levelக்கு போகும் சந்தானம்.. இத்தனை கோடி சொத்து இருக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் தமிழ் சினிமா படங்களை ட்ரோல் செய்து காமெடி ஹீரோவாக கலக்கிய சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கால்ஷீட் கொடுக்கவே நேரமில்லாமல் ஓடிக் களைத்த நிலையில், அடுத்ததாக ஹீரோவாக மாறியும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.
தனது டைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் சந்தானம் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகர் சந்தானம் 45 வயது வரை சேர்த்து வைத்துள்ள பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் குறித்தும் அவரது சொகுசு கார்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க..
சந்தானம் பிறந்தநாள்: ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் இந்த பொங்கல் பண்டிகைக்கு கூட மத கஜ ராஜா படத்தின் மூலம் வயிறு குலுங்க சிரிக்க வைத்து வரும் நடிகர் சந்தானத்தின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் நேற்று மாலை முதலே சந்தானத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் 1980ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி பிறந்தவர் சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. கஷ்டப்பட்டு போராடினால் சினிமாவில் பெரிதாக சாதிக்கலாம் என விஜய் டிவி பிரபலங்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்ததே சந்தானம் தான் என்று சொன்னாலும் அது மிகையாகாது. அவரை தொடர்ந்து தான் சிவகார்த்திகேயன், யோகி பாபு, கவின் உள்ளிட்ட பலர் விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோவாக அறிமுகமானார்கள்.
நெக்ஸ்ட் லெவல்: சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது. ஆர்யா தயாரிப்பில் உருவாகும் அந்த படத்தில் கெளதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, கீதிகா திவாரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கப் போவதாக நேற்றே காஸ்டிங் அப்டேட்களும் குவிந்தன. டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சந்தானத்துக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிய நிலையில், அதன் அடுத்த பாகத்தை பிரேம் ஆனந்த் இயக்கி வருகிறார்.
சந்தானம் சொத்து மதிப்பு: 12 ஆண்டுகளுக்கு முன்னதாக சந்தானம் காமெடியனாக நடித்த மத கஜ ராஜா படம் இந்த பொங்கலுக்கு வெளியாகி 50 கோடி வசூலை நெருங்கிவிட்டது. காமெடி நடிகராக இருக்கும் போதே ஒரு நாளைக்கு 1 கோடி வரை சந்தானம் சம்பளம் வாங்கும் அளவுக்கு சந்தானத்தின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஹீரோவான பின்னர் ஏற்ற இறக்கங்களுடன் அவரது திரை வாழ்க்கை வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்து வருகின்றன. சந்தானம் ஒரு படத்துக்கு சுமார் 14 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் சொகுசு பங்களா ஒன்று 15 கோடி ரூபாய் மதிப்பில் சந்தானத்துக்கு இருப்பதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக அவரிடம் 85 கோடி முதல் 90 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன.
சந்தானம் குடும்பம்: கடந்த 2004ம் ஆண்டு உஷா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சந்தானத்துக்கு ஹாசினி மற்றும் நிபுண் என ஒரு மகளும் மகனும் உள்ளனர். 2 கோடி ரூபாய் மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் ஒன்றையும் மற்ற சில விலை குறைவான கார்களையும் தனது கராஜில் அடுக்கி வைத்திருக்கிறார் சந்தானம். ஹீரோவாக நடித்தாலும் நகைச்சுவை படங்களையே கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைப்பது மட்டுமே தன்னுடைய லட்சியம் என வாழ்ந்து வரும் சந்தானத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!


Click it and Unblock the Notifications











