தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தானம்- உதயநிதி கூட்டணி!

By Shankar

கேமரா இல்லாமல் கூட படமெடுக்கப் போவார்கள்... ஆனால் சந்தானம் இல்லாமல் போக மாட்டார்கள் போலிருக்கிறது ஜீவா, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்.

அந்த அளவுக்கு அந்தப் படங்களின் வெற்றிக்கு சந்தானத்தின் கவுண்டமணி ஸ்டைல் காமெடி உதவுகிறது.

Santhanam - Udhanidhi join third time

மேலே குறிப்பிட்ட நாயகர்கள் நடிக்கும் அத்தனை படங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார் சந்தானம்.

உதயநிதியும் சந்தானமும் தொடர்ந்து மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்கள் நண்பேன்டா படம் மூலம்.

'இது கதிர்வேலன் காதல்' படம் வெளியான பிறகு, உதயநிதி ஸ்டாலின் தொடங்கப் போகும் படம் 'நண்பேன்டா'.

இந்தப் படத்தை இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஏ.ஜெகதீஷ் இயக்குகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிகிறது.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு இசை அமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜே இந்தப் படத்திற்கும் இசை அமைக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தொடங்கவுள்ளன.

ராஜேஷ் இயக்கிய 'பாஸ் என்னிகிற பாஸ்கரன்' படத்தில் சந்தானம் அடிக்கடிப் பேசும் வசனம்தான் இந்த 'நண்பேன்டா' தலைப்பு என்பது தெரியும்தானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X