அடேங்கப்பா.. 600 ஸ்க்ரீன்ல சந்தானம் படம் ஃபர்ஸ்ட் டைம் ரிலீஸ் ஆகுதா?.. அப்போ ஜாக்பாட் தான்!
சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளியாக உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு க்ளீன் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக உலகம் முழுவதும் 600 ஸ்க்ரீன்களில் தனது படம் வெளியாக போகிறது என்கிற சந்தோஷமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சந்தானம்.
விஜய் டிவியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் பல நடிகர்களையும் அவர்கள் நடித்த படங்களையும் கலாய்த்து வந்த சந்தானத்தை அப்போதே ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வல்லவன் படத்தில் சிம்பு சந்தானத்தை காமெடியனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து விஜய்யின் சச்சின் உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகராக வடிவேலு உள்ளிட்ட முன்னணி காமெடியன்களுடன் நடிக்க ஆரம்பித்த சந்தானம் சீக்கிரமே நம்பர் ஒன் காமெடியனாக மாறினார்.

கலாய் கிங்: கோலிவுட்டின் கலாய் கிங்காக மாறிய சந்தானம் காமெடியனில் இருந்து ஹீரோவாக தன்னை தானே உயர்த்திக் கொண்டார். ஆனாலும், தொடர்ந்து ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் காமெடி படங்களிலேயே நடித்து வருகிறார். இந்த வாரம் சந்தானம், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் ஆகிறது.
600 ஸ்க்ரீன்ல: இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள வடக்குப்பட்டி ராமசாமி படம் நாளை 600 ஸ்க்ரீன்களில் வெளியாக உள்ளதாக தற்போது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். பொங்கல் முதல் கடந்த வாரம் வெளியான படங்கள் வரை எதுவுமே பெரிதாக போகாத நிலையில், சந்தானம் படத்துக்கு செம ஜாக்பாட் அடித்துள்ளது. அதன் காரணமாகத்தான் இத்தனை ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த சர்ச்சைக்குப் பிறகு ஹைப்?: பெரியாரை அவதூறாக பேசிவிட்டார் என வடக்குப்பட்டி ராமசாமி படத்தை ரிலீஸ் செய்வதில் இருந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் விலகிய நிலையில், அதெல்லாம் புரமோஷன் என சந்தானம் சொன்னது போலவே அது புரமோஷனாக மாறிவிட்டதா? அந்த சர்ச்சைக்குப் பிறகு இத்தனை ஸ்க்ரீன்கள் சந்தானம் படத்திற்கு கிடைத்திருக்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இதாவது ஹிட் அடிக்குமா?: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஜனவரி மாதம் வெளியான படங்கள் எல்லாமே சுமார் மூஞ்சு குமாராகவே உள்ள நிலையில், பிப்ரவரி துவக்கத்தில் வெளியாக உள்ள வடக்குப்பட்டி ராமசாமி படமாவது வசூல் அள்ளுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகி உள்ள டெவில், ரக்ஷன் நடித்துள்ள மறக்குமா நெஞ்சம் மற்றும் சிக்லெட்ஸ் என 4 படங்கள் நாளை ரிலீஸ் ஆகின்றன.


Click it and Unblock the Notifications











