விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்த செய்தியை அறிந்ததும்.. ஓடோடி வந்த சந்தானம்.. தீயாக பரவும் வீடியோ
சென்னை: இசையமைப்பாளரும் ஹீரோவுமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் உயிரிழந்ததை அறிந்ததுமே நடிகர் சந்தானம் விஜய் ஆண்டனி வீட்டுக்கு விரைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
12ம் வகுப்பு படித்து வந்த 16 வயதே ஆன விஜய் ஆண்டனியின் மூத்த மகள் இன்று அதிகாலை தனது அப்பா விஜய் ஆண்டனியின் அறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது.

பல சினிமா பிரபலங்களும் விஜய் ஆண்டனியை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அவரது உடல் இன்று மதியத்துக்கு மேல் வீட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் இன்று மாலையே இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மனவேதனையில் விஜய் ஆண்டனி: பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீதும் அந்த பெண் தொகுப்பாளினி மீதும் மான நஷ்ட வழக்கு பதியப் போவதாகவும் மிகுந்த மன உளைச்சலில் தான் உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அதை விட அவரது மகளின் திடீர் தற்கொலை மரணம் அவரை கடுமையான மனவேதனையில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் ஆண்டனி வீட்டுக்கு வந்த சந்தானம்: விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து மரணித்த சம்பவத்தை கேள்விப் பட்டதும் நடிகர் சந்தானம் உடனடியாக விஜய் ஆண்டனி வீட்டுக்கு விரைந்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
விஜய்யின் வேலாயுதம் படத்தில் சந்தானம் நடித்த நிலையில், அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்து இருந்தார். மேலும், சந்தானம் நடித்த நம்பியார் படத்துக்கும் விஜய் ஆண்டனி தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக குடும்ப நண்பராகவே இருந்து வந்த சந்தானம் விஜய் ஆண்டனியின் மகள் மரணம் குறித்து அறிந்ததும் அவரது வீட்டுக்குச் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











