சந்தானத்தின் மனைவி புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?.. சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங்
சென்னை: நடிகர் சந்தானம் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக இங்க நான்தான் கிங்கு படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இந்தச் சூழலில் சந்தானத்தின் மனைவி புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்லது.
சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இந்தச் சூழலில் அண்மையில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.
வடக்குப்பட்டி ராமசாமி: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு கிக் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது அவர் வடக்குப்பட்டி ராமசாமி என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதனையொட்டி படத்திலிருந்து சில நொடிகள் ஓடக்கூடிய க்ளிம்ப்ஸ் காட்சி ஒன்று வெளியானது. அதில் சந்தானத்தை பார்த்து ஒருவர், கடவுள் இல்லைனு சொல்லிட்டு ஊருக்குள்ள ஒருத்தர் சுத்துனாரே அந்த ராமசாமியா நீ என்று கேட்கும்படி இருந்தது. அது சர்ச்சையை ஏற்படுத்தியது.
டீசண்ட் வரவேற்பு: சர்ச்சைக்கு இடையே வெளியான படத்துக்கு சிகர்கள் தங்களது டீசண்ட்டான வரவேற்பை கொடுத்தனர். ருக்கிறார். இதனையடுத்து இங்க நான்தான் கிங்கு என்ற படத்தில் கடைசியாக நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் சந்தானமும், அவரது ரசிகர்களும் உச்சக்கட்ட வருத்தத்தில் இருக்கின்றனர்.
மனைவி: இந்நிலையில் சந்தானத்தின் மனைவி புகைப்படம் ட்ரெண்டாகியுள்ளது. சந்தானத்தின் திருமணம்போது அந்தப் புகைப்படம் எடுத்திருக்கிறது. இப்போது அந்தப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர். சந்தானத்தின் மனைவி பெயர் உஷா என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











