வரலாற்று வெற்றிப்பெற்ற முதலாளி.. மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் வாழ்த்து!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் மற்றும் என்னுடைய அன்பான முதலாளி உதயநிதி ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என நடிகர் சந்தானம் ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றிப் பெற்ற மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
சினிமா, அரசியல், தொழில் துறையை சார்ந்த பல பிரபலங்களும் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செம காம்போ
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து சந்தானம் காமெடியில் கலக்கி உள்ளார். இருவரும் இணைந்து நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. உதயநிதி ஸ்டாலின் சந்தானம் காம்போ மீண்டும் இடம் பெற வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மை டியர் முதலாளி
உதயநிதி ஸ்டாலினை செல்லமாக முதலாளி என அழைத்து வரும் நடிகர் சந்தானம் திமுக சார்பில் போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றிப்பெற்ற நிலையில், வரலாற்று வெற்றிப் பெற்ற மை டியர் முதலாளிக்கு வாழ்த்துக்கள் என உதயநிதி ஸ்டாலினுக்கு சந்தானம் வாழ்த்தி உள்ளார்.

முதல்வருக்கு வாழ்த்து
முதல்வராக இன்று பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் ஆட்சியில் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் செழித்து வளரட்டும் என்றும் வாழ்த்தி உள்ளார்.

இனி ஜாலி தான்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் அட்டகாசமான காமெடியை காட்சியை போட்டு ரசிகர்கள், "இனி எந்த ஸ்டேஷனுக்கு போயும் மிமிக்ரி பண்ண தேவையில்லை" என்றும் பார்த்தாவுக்கு ஒரே ஜாலி தான் என்றும் ஏகப்பட்ட ஜாலியான கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











