80s Buildup Blue Sattai Maran Review: மொக்கைப் போட்ட சந்தானம்.. போனை நோண்டிக்கிட்டே படம் பாருங்க!
சென்னை: திரைப்படங்களை தியேட்டருக்குள் சென்று பார்க்கும் போது செல்போனை ஆஃப் செய்து வைத்து விட்டு படத்தை என்ஜாய் பண்ண சொல்வாங்க.. ஆனால், சந்தானம் நடித்துள்ள 80ஸ் பில்டப் படத்தை போனை நோண்டிக் கொண்டே பாருங்க அந்த அளவுக்கு மரண மொக்கை படம் என ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றி உள்ளார்.
கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, கே எஸ் ரவிக்குமார், சுந்தர்ராஜன், மன்சூர் அலிகான், மனோபாலா, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஷ் காந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை நடித்துள்ள 80ஸ் பில்டப் திரைப்படம் நேற்று வெளியான நிலையில், அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

80ஸ் பில்டப் விமர்சனம்: விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சந்தானத்தின் 80s பில்டப் திரைப்படத்தில் எந்தவொரு சுவாரஸ்யமும், நகைச்சுவையும் இல்லை என்றும் கடைசிவரை கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு வளவள என பேசிக் கொண்டே இருக்கின்றனர். யாருமே சீரியஸாக நடித்தது போல தெரியவில்லை என விமர்சித்துள்ளார்.
மொக்கை படம்: கதை என்று பார்த்தால், சந்தானம் மற்றும் அவரது சகோதரி தாத்தா இறந்த வீட்டிற்கு வரும் ஹீரோயினை சந்தானம் காதலிக்க வைப்பாரா மாட்டாரா என்கிற போட்டியை நடத்துகின்றனர். பழைய பண்ணையார் வீடான அந்த வீட்டில் இருக்கும் ஒரு கத்தியில் விசேஷம் இருப்பதாக அதை கொள்ளையடிக்க மன்சூர் அலிகான் டீம் வருவதும், உயிரிழந்த தாத்தாவை கொண்டு செல்ல எமதர்மன் கே.எஸ். ரவிக் குமார் வருவதாகவும் ஏகப்பட்ட கிளைக்கதைகள் ஓடிக்கொண்டிருக்கிறதே தவிர உருப்படியான கதைக்கு படம் வரவே இல்லை என்றும் ஜாலியாக பார்க்க வந்த படத்தில் அவர்கள் போட்ட மொக்கையை பார்த்து தலைவலி வந்ததுதான் மிச்சம் என்றும் இது போன்ற படங்களை ரசிகர்கள் கைவிட்டு விடக்கூடாது என்றும் தியேட்டருக்கு சென்று போனை ஃபுல் சார்ஜில் போட்டு எடுத்துக் கொண்டு மற்ற செய்திகளையும், மற்ற வேலைகளையும் பார்த்துக் கொண்டே படத்தை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என பங்கமாக கலாய்த்து உள்ளார்.
சொதப்பிய சந்தானம்: இந்த ஆண்டு டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு கை கொடுத்த நிலையில், அவர் 10 படங்கள் நடித்தால் ஒரு படம் தான் ஹிட் அடிக்கும் என்றும் இப்போதைக்கு அவர் படத்தை பார்த்து ஏமாற வேண்டாம் என்றும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











