நச்சுன்னு நறுக்குன்னு குத்தாட்டம்... VIBE ஓட மஜாவா என்ஜாய் பண்ண சந்தானம்.. வெளியான வீடியோ!

சென்னை: சந்தானம், சுரபி நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதை எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். இதன் தொடர்ச்சியாக டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகியுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். ஆர்யா காம்பினேஷனில் ஒரு படமும் நடிக்க சந்தானம் கமிட் ஆகியுள்ளார். கலகலப்பாக பேசி சிரிக்க வைக்கும் சந்தானம், கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தி குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சுந்தர்.சி காம்போ: நக்கல் நையாண்டி என கலகலப்பை ஏற்படுத்தும் சந்தானம் இருக்கும் இடம் எப்போது போர் அடிக்காது. அவர் பேச்சில் காமெடி கஜானா போல் குவிந்து கிடக்கிறது. கடந்த மாதம் வெளியான மதகஜராஜாவில் சந்தானம் காமெடி வேற லெவலில் இருப்பதாக பாராட்டை பெற்றது. காமெடி டிராக்கை மாற்றி ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திற்கு மதகஜராஜா ரொம்ப ஸ்பெஷலான படம் என்றே கூறலாம். சுந்தர் சி காம்பினேஷனில் சந்தானம் நடித்த கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, ஆம்பள படங்கள் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கும். எனவே இந்த காம்பினேஷனில் படம் வெளியாகாத என்று ஏங்கியிருந்த ரசிகர்களுக்கு மதகஜராஜா நல்ல காமெடி ட்ரீட்டாக இருந்தது.

santhanam DD next level Dance video

ஆர்யா எழுதும் பாடல்: சந்தானம் தொடர்ந்து காமெடி கலந்த ஆக்சன் மற்றும் ஹாரர் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தில்லுக்கு துட்டு ஹாரர் சீரிஸ் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு தொடங்கியது. இப்படத்தில் செல்வராகவன், கெளதம் வாசுதேவ், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடலை சந்தானத்தின் நெருங்கிய நண்பரான ஆர்யா எழுதுவது போன்ற புரோமோ வீடியோ வெளியானது. சந்தானம் நடித்த ஹாரர் படங்களுக்கு ரசிகர்கள மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. பக்கா காமெடியுடன் சந்தானத்தின் பன்ச் வசனம் மிஸ் ஆகாது என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

காமெடியில் அசத்தும் ராஜேந்திரன்: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே இணைந்து நடிக்கிறது. குறிப்பாக மொட்டை ராஜேந்திரன் - சந்தானம் காம்போவை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு2, டிடி, பாரிஸ் ஜெயராஜ் என தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இந்த காம்பினேஷனில் உருவான காமெடிகளை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கலாம். மொட்டை ராஜேந்திரனை சந்தானம் பங்கமாய் கலாய்த்தாலும் பாசிட்டிவாக எடுத்துகொண்டு நடித்து வருகிறார். வில்லன் ராஜேந்திரனாய் மிரட்டியதை விட காமெடியில் அசத்தி வருகிறார் மொட்டைராஜேந்திரன்.

குத்தாட்டம்: சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடந்த DEEPwood MCC நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சந்தானம், செம மஜாவாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்தார். ரொம்பவும் ஜாலியாக ஃபன் செய்து செம குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோவை சந்தானம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் ஜாலியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர்கள் கூட்டத்தின் முன்பு மேடையில் சந்தானம் குத்தாட்டம் போட்டு அதகளம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X