திரை விமர்சகர்களை வைத்து செய்த சந்தானம்.. டிடி நெக்ஸ்ட் லெவல் ட்ரெய்லர் வெளியானது.. செம போங்க

சென்னை: நடிகர் சந்தானம் தமிழில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தார். ஒருகட்டத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து ஹீரோவாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக இங்க நான்தான் கிங்கு படம் வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனத்தையே கொடுத்தனர். இப்போது டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

சந்தானம் கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவரது டைமிங்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன. கவுண்டமணி ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்தாலும் அதில் தனக்கென தனி பாணியை பின்பற்றினார். இதன் காரணமாக வடிவேலு எப்படி பீக்கில் இருந்தபோது இல்லாமல் ஒரு படமும் வெளியாகவில்லையோ அதேபோல் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. அதேசமயம் சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர்கள் சமயத்தில் சர்ச்சைகளையும் சம்பாத்திருக்கின்றன.

ஹீரோ சந்தானம்: நிலைமை இப்படி இருக்க அவருக்கு திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டது. அதனையடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சபாபதி, ஏ1, டிக்கிலோனா என பல படங்களில் வரிசையாக ஹீரோ வேடம் ஏற்றார். ஆனால் எந்தப் படமும் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டும்தான் அவருக்கு ஓரளவு வெற்றியை கொடுத்தது.

டீசன்ட் வரவேற்பு: டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு அவர் நடித்த கிக், 80ஸ் பில்ட் அப், வடக்குப்பட்டி ராமசாமி, இங்க நான்தான் கிங்கு உள்ளிட்ட படங்கள் அனைத்துமே படுதோல்வியை சந்தித்தன. எப்படியாவது ஹீரோவாக ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதில் கடுமையாக உழைத்துவருகிறார். அந்தவகையில் இப்போது அவர் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகியிருக்கிறது.

Santhanam s DD Next Level Movie Trailer was out now

நம்பிக்கையில் சந்தானம்: ஹீரோவாக வரிசையாக ஹிட்டை கொடுக்க முடியவில்லையே என்று அவரும், அவரது ரசிகர்களும் கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவே விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் மீது அவர் உச்சக்கட்ட நம்பிக்கையை வைத்திருக்கிறாராம்.ஏனெனில் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்களில் டிக்கிலோனாவுக்கு பிறகு டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டும்தான் நல்ல வரவேற்பை கொடுத்தது. இப்போது அதன் இரண்டாவது பாகம் வருவதால் அந்த நம்பிக்கை பிறந்திருப்பதாக தெரிகிறது.

வெளியான ட்ரெய்லர்: இந்நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ட்ரெய்லரை பார்க்கையில், சந்தானம் திரை விமர்சனம் செய்பவராக வருவதும், அவர் தனி தீவு ஒன்றில் மாட்டிக்கொண்டு பேயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை என புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் கௌதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட இயக்குநர்களும் இந்தப் படத்தில் வேறு ஃப்ளேவரில் வருவதும் ட்ரெய்லரை பார்க்கையில் தெரிகிறது. முக்கியமாக திரை விமர்சகர்களை இதில் வைத்து செய்திருக்கிறார்கள் என்பதும் ட்ரெய்லரை பார்க்கையில் உறுதி செய்ய முடிகிறது.

மீண்டும் காமெடியன்: படமானது மே 16ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் ஹீரோவாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி ரோலும் செய்ய வேண்டும் என்பது அவரது ரசிகர்களுடைய எதிர்பார்ப்பு. சூழல் இப்படி இருக்க சிம்பு நடிக்கும் புதிய படத்தில் சந்தானம் காமெடியனாக நடிக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X