சபாஷ் சரியான போட்டி.. டிடி நெக்ஸ்ட் லெவல் vs மாமன்.. முதல் நாள் வசூலில் மாஸ் காட்டப்போவது யாரு?

சென்னை: யோகி பாபுவின் 'ஜோரா கைய தட்டுங்க' திரைப்படம் மே 15ம் தேதி வெளியான நிலையில், அந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக கலெக்ட் செய்யவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாரம் ரியல் போட்டியே சந்தானம் மற்றும் சூரி இடையே தான் என்கின்றனர்.

சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் என இரு படங்களும் நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி போடப்பட்டு விமர்சனங்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் இரு படங்களும் திட்டமிட்டபடி வெளியாகி உள்ளன.

Santhanam s DD Next Level vs Soori s Maaman Day 1 Box Office Predictions are here

நடிகர் சூரி கருடன் படத்தின் மூலம் 50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நிலையில், மாமன் படம் மூலம் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை கொடுப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் அந்த படம் எந்தளவுக்கு வசூல் செய்தால் பிரேக் ஈவனை நெருங்கும் உள்ளிட்ட தகவல்களை விரிவாக இங்கே பார்க்கலாம்.

மாமன் முதல் நாள் வசூல் கணிப்பு: பிரசாந்த் பாக்கியராஜ் இயக்கத்தில் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ்கிரண், பால சரவணன், பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த மாமன் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 1 முதல் 2 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. நடிகர் சூரி தொடர்ந்து கதையின் நாயகனாக நடித்து வரும் நிலையில், கருடன், விடுதலை 2 படங்களுக்குப் பிறகு மாமன் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், வசூல் ரீதியாக இந்த படம் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையாத நிலையில், மாமன் திரைப்படம் அவருக்கு சறுக்கலை கொடுத்தால் அடுத்து வரும் மண்டாடி படத்துக்கும் அடி விழும் என்கின்றனர்.

Santhanam s DD Next Level vs Soori s Maaman Day 1 Box Office Predictions are here

டிடி நெக்ஸ்ட் லெவல் முதல் நாள் வசூல் கணிப்பு: ஆர்யா தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் சந்தானத்துக்கும் ஆர்யாவுக்கும் வெற்றிப் படமாக அமையுமா என்பது இன்று மக்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகின்றனர் என்பதை பொறுத்துதான். கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், கீதிகா திவாரி எல்லாம் இருந்தாலும் ஆபாச காட்சிகள் இல்லாதது படத்திற்கு பலம். சினிமா விமர்சகர் பேயிடம் சிக்கிய கதை மக்களுக்கு பிடித்தால் படம் வசூல் ரீதியாக வெற்றியடையும் என்கின்றனர். முதல் நாளில் அதிகபட்சமாக டிடி நெக்ஸ்ட் லெவல் 2 முதல் 3 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Take a Poll

20 கோடி வசூல் செய்யவேண்டும்: சந்தானம், கீதிகா, யாஷிகா ஆனந்த், கெளதம் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட நிலையில், 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தால் தான் லாபகரமான படமாக மாறும் என்கின்றனர். சூரியின் மாமன் படம் 10 முதல் 15 கோடி வசூல் செய்தாலே லாபத்தை கொடுக்கும் என்கின்றனர். டிடி ரிட்டர்ன்ஸ் 41 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில், சந்தானம் இந்த சம்மரில் சிக்ஸர் அடிப்பாரா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். சந்தானம் vs சூரி மோதலில் முதல் நாளில் சந்தானத்தின் கை ஓங்கி இருக்கும் என கணிக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X