DD Returns Box Office Collection: மாஸ் காட்டிய டிடி ரிட்டர்ன்ஸ்.. தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்!
சென்னை: சந்தானம் நடிப்பில் வெளியாகி உள்ள டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. சந்தானம் நடித்த ஒரு சில படங்களை இயக்கிய ராம்பாலாவின் உதவி இயக்குனர் பிரேம் ஆனந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார்.
இதில், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், மாறன், மாசூம் சங்கர், தீபா, பிரதீப் ராவத், விபின், பெப்சி விஜயன், தீனா, தங்கதுரை, முனீஸ் காந்த், சைதை சேது ஆகியோர் நடித்து உள்ளனர்.

டிடி ரிட்டர்ன்ஸ்: ஹாரர், காமெடி ஜானரில் உருவாகி உள்ள இந்த படத்தில், சந்தானம் சதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுரபி சோபியா என்ற கேரக்டரில் நடித்துள்ளனர். நடிகர் சந்தானம் தனது காதலி சுரபியை காப்பாற்றுவதற்காக பணத்தை திருடுகிறார். ஆனால், அந்த பணம் பேய் பங்களாவில் மாட்டிக் கொள்கிறது.
பேய் பங்களா: முன்னொரு காலத்தில் பாண்டிச்சேரி பகுதியில் சூதாட்டத்தில் தோற்பவர்களை கொலை செய்வதை வழக்கமாக வைத்திருந்த ஒரு குடும்பத்தையே, அந்த ஊர் மக்கள் எரித்து கொல்கின்றனர். அந்த குடும்பத்தில் இறந்த அத்தனை பேரும் அந்த பங்களாவில் பேயாக சுற்றி வருகின்றனர். பணத்தை தேடி பங்களாவிற்குள் போகும் சந்தானம் மீட்டார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

சந்தானம் இட்ஸ் கம்பேக்: தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமான இத்திரைப்படமும் சந்தானத்திற்கு கம்பேக் கொடுத்து இருக்கிறது. டிடி ரிட்டர்ன்ஸ் ஆடியோ லான்சில் இது முழுக்க ழுழுக்க சந்தானத்தின் படமாக இருக்கும் என்று சொன்னது போல, இப்படம் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. சந்தானத்திற்கு கம்பேக் கொடுத்துள்ள இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
முதல் நாள் வசூல்: இந்நிலையில், நேற்று திரையரங்கில் வெளிவந்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ. 2 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்திற்கு நல்ல விமர்சனம் வந்துள்ளதாலும், இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இனிவரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











