DD Returns: சைலன்ட்டா சந்தானம் செய்த சம்பவம்.. அய்யோ.. மொட்டை ராஜேந்தர் என்ட்ரி தான் சகிக்கல!

சென்னை: விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமான நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி டாப் காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்தார்.

அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா, இனிமே இப்படித்தான் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Santhanams DD Returns trailer update teaser out now

ஆனால், அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே தொடர்ந்து தோல்வியை தழுவி வரும் நிலையில், அவர் நடித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த தில்லுக்கு துட்டு படத்தின் 3ம் பாகத்தை சைலன்ட்டாக நடித்து முடித்து இந்த மாதம் ரிலீஸ் செய்யப் போவதாக சற்று முன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

காணாமல் போன சந்தானம்: கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரீஸ் ஜெயராஜ் திரைப்படம் காமெடியாகவும் சந்தோஷ் நாராயணன் இசையில் கானா பாடல்களிலும் கலக்கி ரசிகர்களை ஓரளவுக்கு என்டர்டெயின் செய்தது.

Santhanams DD Returns trailer update teaser out now

ஆனால், அதன் பின்னர் சந்தானம் ஹீரோவாக நடித்து வெளியான டிக்கிலோனா, சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட பல படங்கள் ஃபிளாப் ஆகின. அதன் பின்னர் சோஷியல் மீடியாவிலும் சத்தமே காட்டாமல் இருந்த சந்தானம் தற்போது மீண்டும் தில்லுக்கு துட்டு 3ம் பாகத்தை ரிலீஸ் செய்யப் போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

டிடி ரிட்டர்ன்ஸ் எப்போ ரிலீஸ்: இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு முதல் மற்றும் 2ம் பாகம் கமர்ஷியல் ஹிட் அடித்த நிலையில், இந்த மாதம் ஜூலை 28ம் தேதி டிடி ரிட்டர்ன்ஸ் எனும் தலைப்பில் உருவாகி உள்ள தில்லுக்கு துட்டு 3ம் பாகத்தை வெளியிடப் போவதாக சந்தானம் அறிவித்துள்ளார்.

நாளை அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்கிற அறிவிப்பு டீசரை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் சந்தானம்.

பம்மில் இருந்து வரும் மொட்டை ராஜேந்தர்: ஒரு அழகான பெண் குரலில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் அப்டேட்கள் சொல்லிக் கொண்டிருக்க, வாய்ஸ் நல்லா இருக்கே என காண்டாமிருக பொம்மை உள்ளே ஒளிந்திருக்கும் மொட்டை ராஜேந்தரன் அதன் பம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சியை வைத்து ஆரம்பமே அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்பாலா.

நாளை வெளியாகும் டிரெய்லரில் இன்னும் என்னவெல்லாம் கூத்து இருக்குமோ என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். காஞ்சனா, அரண்மனை சீரிஸ் போல தில்லுக்கு துட்டு சீரிஸை நம்பியிருக்கும் சந்தானத்துக்கு இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X