Santhanam's Kick - அடுத்த ஹிட்டுக்கு தயாரான சந்தானம்.. கிக் மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை: Santhanam's Kick (சந்தானத்தின் கிக்) கிக் படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் அந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் சந்தானத்தின் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி ஆக்டர்களில் ஒருவர் சந்தானம். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோர் பீக்கில் இருந்தபோது எப்படி அவர்கள் இல்லாமல் ஒரு படம்கூட வந்தது இல்லையோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகவில்லை. அந்த அளவுக்கு பிஸியாகவும், வெரைட்டியாகவும் நடித்தார் சந்தானம்.

டைமிங்கில் கில்லி: கவுண்டமணியின் ஃபார்முலாவை ஃபாலோ செய்த சந்தானம் தனது டைமிங் காமெடியால் வயிறு குலுங்க ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இன்றுவரை அவர் நடித்த சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களின் காமெடி ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கின்றன.
ஹீரோ சந்தானம்: தனது கரியரின் உச்சத்தில் இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ர படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து ஹீரோவாகவே நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் நடித்த இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, டகால்டி, ஏ1 என வரிசையாக நடித்துவருகிறார்.
காமெடி கலந்த கதைதான்: தன்னுடைய பலமான காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளையே தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்துவருகிறார். அப்படி அவர் நடித்த டிக்கிலோனா படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் பெரிய ஹிட் ஒன்றுக்காக காத்திருந்தார் சந்தானம். அந்தவகையில் கடைசியாக அவர் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த அந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
கிக்: இந்தச் சூழலில் சந்தானம் கிக் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியிருக்கிறார்.சந்தானத்துடன் தான்யா ஹோப், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படமும் காமெடி ஜானரில் உருவாகியிருக்கிறது.
கட்டாயம் ஹிட்தான்: சந்தானத்தின் நடிப்பில் கடைசியாக வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் எப்படி ஹிட்டானதோ அதேபோல் இந்தப் படமும் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் படத்தில் காமெடி கொஞ்சம் தூக்கலாக இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போது உறுதியாகியிருக்கிரது. எனவே இந்தப் படம் ஹிட்டாகும் என சந்தானத்தின் ரசிகர்கள் உறுதியாக கூறுகின்றனர். படமானது செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்திலிருந்து கில்மா நீ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. அர்ஜுன் ஜான்யாவும், ஜோனிட்டா காந்தியும் பாடியிருந்த அந்தப் பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











