DD Returns Trailer: பேய்க்கூடவே ஊ அன்டாவாவா.. வேறலெவல் சந்தானம்.. டிடி ரிட்டர்ன்ஸ் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 படங்களை இயக்குநர் ராம்பாலா இயக்கிய நிலையில், தில்லுக்கு துட்டு 3ம் பாகமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.

நடிகர் சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த ஹாரர் காமெடி படத்தின் அட்டகாசமான டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது.

Santhanams horror comedy movie DD Returns Trailer out now

கஜினி படத்தில் வில்லனாக நடித்த பிரதீப் ராவத் இந்த படத்தில் ஃபிரெஞ்சு பேய் வில்லனாக நடித்து மிரட்டி உள்ளார்.

வெற்றிக்காக ஏங்கும் சந்தானம்: நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. ஒரு சில படங்கள் காமெடி காட்சிகளுக்காக சுமாரான வெற்றியை பெற்றுள்ளன. கமர்ஷியல் வெற்றியை தில்லுக்கு துட்டு படம் கொடுத்துள்ள நிலையில், அதன் 3ம் பாகத்தை டார்கெட் செய்து நடித்து இந்த மாத இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

Santhanams horror comedy movie DD Returns Trailer out now

யோகி பாபு மண்டேலா படத்தில் நடித்து நல்ல நடிகர் என்கிற பெயரை பெற்று விட்டார். நடிகர் சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் சிறந்த நடிகராகவே மாற்றியுள்ளது. சமீபத்தில், மாரி செல்வராஜ் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் வடிவேலுவின் ஒட்டுமொத்த நடிப்புத் திறமையையும் வெளி கொண்டு வந்தது. ஆனால், அது போல சந்தானத்துக்கு இன்னமும் ஒரு சிறந்த படம் கிடைக்கவில்லை.

டிடி ரிட்டர்ன்ஸ் டிரைலர் ரிலீஸ்: ஆனால், தனக்கு தெரிந்த காமெடி ரூட்டை விடாமல் பிடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் வேலையை பார்த்து வரும் சந்தானம் அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ரிலீஸ் செய்ய ரெடியாகி உள்ளார்.

Santhanams horror comedy movie DD Returns Trailer out now

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், சுரபி, மொட்டை ராஜேந்தர், ரெட்டின் கிங்ஸ்லி, மசூம் சங்கர், முனீஷ்காந்த், தீனா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி பேய் படமான டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

பேயுடனே ஊ அன் டாவா: பேய் வீட்டில் நடக்கும் எஸ்கேப் ரூம் கேமில் கலந்து கொண்டால் நிறைய பணம் கிடைக்கும் என காதலியுடன் அங்கே சென்று பேய்களுக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளும் சந்தானம் எப்படி வெளியே வருகிறார் என்பது தான் படத்தின் கதை.

டிரெய்லர் கடைசியில், வரும் அந்த சமந்தாவின் புஷ்பா படத்தில் இடம்பெற்ற "ஊ அன்டாவா" போர்ஷன் ரசிகர்களை குபீரென சிரிக்க வைப்பது கன்ஃபார்ம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X