Santhanam's Kick - கில்மா நீ.. வெளியானது சந்தானத்தின் கிக் பட லிரிக்கல் வீடியோ.. ரசிகர்கள் வரவேற்பு

சென்னை: Santhanam' Kick (சந்தானத்தின் கிக்) சந்தானம் நடித்திருக்கும் கிக் படத்திலிருந்து கில்மா நீ மஜாக்கு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் சிம்பு மூலம் திரைத்துறைக்குள் வந்தவர் நடிகர் சந்தானம். காமெடி நடிகராக அறிமுகமாகி அதகளம் செய்தவர். அவரது டைமிங் காமெடிகள் அனைத்துமே வயிறு வலிக்க சிரிக்க வைத்தவை. குறிப்பாக கவுண்டமணி எப்படி டைமிங்கில் அடுத்தவர்களை கலாய்த்தாரோ அதே ஃபார்முலாவை சந்தானம் ஃபாலோ செய்து சிரிப்பு பட்டாசை பற்ற வைத்தார்.

Santhanams Kick Movie Gilma Song Lyrical Video is out now

சந்தானம்தான் எல்லாமே: வடிவேலு பீக்கில் இருந்தபோது எப்படி அவர் இல்லாமல் ஒரு படம்கூட வெளியாகாதோ அதேபோல்தான் சந்தானம் பீக்கில் இருந்தபோதும் நிலைமை இருந்தது. எந்தப் படத்தில் பார்த்தாலும் சந்தானம் நடித்திருப்பார். அதுமட்டுமின்றி பல படங்கள் சந்தானத்தின் காமெடிக்காகவே ஓடிய கதையும், பல அறிமுக ஹீரோக்கள் சந்தானத்தின் துணையோடு முதல் படத்தில் தப்பித்த கதையும் உண்டு.

ஹீரோ சந்தானம்: ஒருகட்டத்தில் காமெடியிலிருந்து விலகி கதாநாயகனாக நடித்தார் சந்தானம். அவர் ஹீரோவாக நடித்த பெரும்பாலான படங்கள் பெரிதாக ஓடவில்லை. இருந்தாலும் ஹீரோவாக ஒரு ஹிட்டாவது கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியானது.

டிடி ரிட்டர்ன்ஸ்: ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த படம் அண்மையில் வெளியானது. படம் பல இடங்களில் வெடித்து சிரிக்க வைப்பதாகவும் படம் ஹிட்டாகிவிட்டதாகவும் ரசிகர்கள் கூறினர். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததாம். அதாவது 12 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 16 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இதனால் சந்தானத்தின் ஹீரோ பயணத்தில் இது முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

Santhanams Kick Movie Gilma Song Lyrical Video is out now

கிக்: சந்தானம் அடுத்ததாக கிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை பிரசாந்த் ராஜ் இயக்கியிருக்கிறார்.சந்தானத்துடன் தான்யா ஹோப், செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படமும் காமெடி ஜானரில் உருவாகியிருக்கிறது. படமானது செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லிரிக்கல் வீடியோ: இந்நிலையில் கிக் படத்தில் இடம்பெற்றிருக்கும் கில்மா நீ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. சந்தானமும், தான்யா ஹோப்பும் அசத்தலாக நடனம் ஆடியிருக்கின்றனர்.அர்ஜுன் ஜான்யா இசையமைப்பில் அவரும், ஜோனிடா காந்தியும் இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர். கவிஞர் விவ்கே பாடல் வரிகளை எழுதியிருக்கிறார். இந்தப் பாடலானது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X