Vadakkupatti Ramasamy Box Office: 600 ஸ்க்ரீன்.. வடக்குப்பட்டி ராமசாமி முதல் நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: கார்த்திக் யோகி இயக்கத்தில் காமெடி படமாக உருவாகியுள்ள சந்தானந்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வரும் நிலையில் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல துவக்கத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சந்தானம், மேகா ஆகாஷ், எம்.எஸ். பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், இட் இஸ் பிரசாந்த், சேஷூ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 600 திரைகளில் வெளியானது. இதற்கு முன் இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில் தனக்கு இந்த படம் உருவாகி இருப்பதாகவும் அதிக ஸ்கிரீன்கள் கிடைத்திருப்பதாகவும் நடிகர் சந்தானம் தெரிவித்திருந்தார்.

Santhanams Vadakkupatti Ramasamy Day 1 Box Office Collection report

சாதித்த சந்தானம்: கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் சந்தானத்துக்கு ஒரு நல்ல வெற்றி படமாகவே அமைந்தது. ஆனால், தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் வசூலித்த அளவுக்கு படம் வசூல் செய்யவில்லை. இந்நிலையில், வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இப்போது வெளியாகி வெற்றியடைந்த டிடி ரிட்டன்ஸ் படத்தை விட அதிகம் வசூல் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாள் வசூல்: 600 ஸ்கிரீன்களில் வெளியான சந்தனத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் காலையிலேயே பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், மாலை 6:00 மணிக்கு மேல் திரையிடப்பட்ட காட்சிகளில் நல்ல தியேட்டர் அக்குபன்ஸி இருந்ததாகவும் முதல் நாள் வசூல் நல்ல துவக்கத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் முதல் ஒன்றரை கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வசூல் அதிகரிக்கும்: சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை நாட்களில் வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ்வான விமர்சனங்கள் காரணமாக வசூலில் உயர்வு ஏற்படும் என்றும் முதல் வார முடிவில் நான்கு முதல் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் அதிக வசூலை சந்தானத்தின் இந்தப் படம் அள்ளும் என்று பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

தியேட்டர்களில் சிரிப்பலை: ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் தி ரேஸ் என்பது போல வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் முதல் பாதியில் ஸ்லோவாக தொடங்கினாலும் இரண்டாம் பாதியில் வரும் காமெடி காட்சிகள் குறிப்பாக நிழல்கள் ரவியை வைத்து கார்த்திக் யோகி செய்துள்ள மேஜிக் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. நடிகர் சந்தானமும் நேற்று தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் வடக்குப்பட்டி ராமசாமி படத்தை பார்த்து தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட காட்சிகளும் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சூடுபிடித்த டிக்கெட் புக்கிங்: வடக்குப்பட்டி படத்திற்கு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ள நிலையில், புக்மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் படத்துக்கான டிக்கெட் புக்கிங் சூடு பிடித்துள்ளன. பொங்கலுக்கு வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராத நிலையில், பிப்ரவரியில் வெளியாகி உள்ள வடக்குப்பட்டி ராமசாமி ரசிகர்களை அதிகளவில் தியேட்டர்களுக்கு கொண்டு வருமா? இன்னமும் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X