சங்கடத்தில் சந்தானம்.. நல்ல விமர்சனம் கிடைத்தும் படம் கல்லா கட்டலையே.. ஹாட்ரிக் அடி!

சென்னை: சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக அடி வாங்கி இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட ஆடியோ ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு சந்தானம் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகின. அதில், டிடி ரிட்டன்ஸ் படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி வாகை சூடியது. மற்ற இரண்டு படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வெளியான சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நிச்சயம் தனக்கு வெற்றியை கொடுக்கும் என சந்தானம் உறுதியுடன் இருந்த நிலையில், இந்தப் படமும் அவருக்கு சங்கடத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Santhanams Vadakkupatti Ramasamy failed at Box Office shocks Kollywood?

டிக்கிலோனா இயக்குநர்: சந்தானம், அனகா, ஷிரின் காஞ்ச்வாலா, நிழல்கள் ரவி, யோகி பாபு, மொட்டை ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படம் டைம் டிராவல் கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தது. அந்த படம் சுமாரான வசூலை கொடுத்திருந்த நிலையில், மீண்டும் அந்த படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார்.

ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: சந்தானம் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கிக் மற்றும் 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்களை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு கொடுத்தது போல வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்திருந்தார். ஆனால், படத்தில் ஒரு சில குறைகளையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். ப்ளூ சட்டை மாறன் மட்டுமின்றி வடக்குப்பட்டி ராமசாமி படத்தை விமர்சித்த பலரும் அந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தனர்.

ராமசாமி வசன சர்ச்சை: வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாவதற்கு முன்னதாக புரமோஷன் ஆக வெளியான ட்ரைலரில் பெரியார் குறித்த சர்ச்சை வசனம் இடம் பெற்றிருந்ததாக சர்ச்சை வெடித்தது. அதன் காரணமாக அந்த படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்காமல் விலகியது படத்துக்கு பெரிய புரோமோஷன் ஆக அமையும் என சந்தானம் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் பயந்ததை போலவே படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய அடியை வாங்கியிருப்பதாக திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

வசூல் பாதிப்பு: மூடநம்பிக்கையால் மக்கள் மூழ்கி கிடக்கின்றனர் என்கிற கதையை மையப்படுத்தி மேலும் அந்த மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்பதை செய்பவர் தான் ஹீரோ சந்தானம் என கதையை வடிவமைத்த நிலையில், மக்கள் இந்த படத்தை தியேட்டருக்கு சென்று பார்ப்பதை பெரிதளவில் தவிர்த்து விட்டனர் என்கின்றனர். கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் இதுவரை ஒட்டுமொத்தமாக ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவாகவே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் சந்தானத்தின் சம்பளம் மட்டுமே 8 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், படத்தின் பட்ஜெட் கூட வசூல் செய்யவில்லையே என சினிமா வட்டாரத்தில் பலரும் விரக்தி தெரிவித்து வருகின்றனர்.

ஆர்யா தயாரிப்பில்: வடக்குப்பட்டி ராமசாமியை தொடர்ந்து அடுத்து ஆர்யா தயாரிப்பில் சந்தானம் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தை நம்பி களமிறங்க உள்ளார். அந்த படத்தை முடித்து விட்டு ஆர்யா மற்றும் சந்தானம் இருவரும் இணைந்து கார்த்திக் யோகி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வாரம் வெளியாகும் லால் சலாம் மற்றும் லவ்வர் படத்துக்கு தியேட்டரில் ரெஸ்பான்ஸ் கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X