twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பேரறிவாளனாக சாந்தனு… அற்புதம் அம்மாளாக பூர்ணிமா பாக்கியராஜ்

    By Mayura Akilan
    |

    பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கதை தமிழ் சினிமாவாகிறது. இந்த படத்தில் ப வரிசை இயக்குநர்களான பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜ் ஆகியோரின் வாரிசுகள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்தப்படத்தில் கவுண்டமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்க உள்ளாராம்.

    ராஜீவ் கொலை வழக்கு

    ராஜீவ் கொலை வழக்கு

    முன்னாள் பிரதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை பெற்று அதிலிருந்து மீண்டவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன்.

    பல ஆண்டு சிறைவாசம்

    பல ஆண்டு சிறைவாசம்

    20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசும் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ள நிலையில் மத்திய அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அரசியல் சாசன அமர்வு முன்பு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    திரைப்படமாகும் மூவர் கதை

    திரைப்படமாகும் மூவர் கதை

    தற்போது பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் வாழ்க்கை கதையையும், அற்புதம் அம்மாளின் போராட்டத்தையும் திரைப்படமாக எடுக்க இருக்கிறார்கள். படத்திற்கு வாய்மை என்று பெயரிட்டிருக்கின்றனர்.

    இயக்குநர்களின் வாரிசுகள்

    இயக்குநர்களின் வாரிசுகள்

    இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் முருகன் வேடத்திலும், சாந்தன் வேடத்தில் பாண்டியராஜ் மகன் பிரித்வி, பேரறிவாளன் வேடத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனு நடிக்கின்றனர்.

    பூர்ணிமா பாக்கியராஜ்

    பூர்ணிமா பாக்கியராஜ்

    அற்புதம் அம்மாள் வேடத்தில் பாக்கியராஜின் மனைவி பூர்ணிமா பாக்கியராஜ் நடிக்க உள்ளதார். இந்தப் படத்தின் கதைக்கு பேரறிவாளனும், அற்புதம் அம்மாளும் சம்மதம் தெரிவித்து விட்டனராம்.

    அரசியல் கிடையாது

    அரசியல் கிடையாது

    வாய்மை திரைப்படம் மரணதண்டனைக்கு எதிரான திரைப்படம்தான். அரசியல் கலப்பற்ற படம் என்றும் கூறியுள்ளார் இயக்குநர் செந்தில் குமார்.படத்தின் ஆடியோவை அற்புதம் அம்மாள்தான் வெளியிடப்போவதாக கூறியுள்ளார் இயக்குநர்.

    மரண தண்டனைக்கு எதிராக

    மரண தண்டனைக்கு எதிராக

    இந்தப் படத்தில் ராஜீவ் கொலைபற்றி பேசப் போவதில்லையாம், மரணதண்டனைக்கு எதிரான ஒரு தாயின் போராட்டத்தைப் பதிவு செய்துள்ளார்களாம். பாக்கியராஜ் முழு ஆதரவு கொடுத்துள்ளாராம்.

    கவுண்டமணி ஆர்வம்

    கவுண்டமணி ஆர்வம்

    வாய்மை திரைப்படத்தில் கவுண்டமணி மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பராக வருகிறார். இதில் அவருடைய பெயர் டாக்டர். பென்னிகுவிக்.

    போராட்டம் வலுவடையும்

    போராட்டம் வலுவடையும்

    இந்தப் படம் வெளியானபின்னர் மரணதண்டனைக்கு எதிரான போராட்டங்கள் மேலும் வலுவடையும் என்கிறார் இயக்குநர் செந்தில்குமார்.

    English summary
    Director Senthil Kumar has taken interests in making a film depicting Santhan, Murugan and Perarivalan’s life and in turn might prove their innocent. Director Pakyaraj’s Son Santhanu doing Perarivalan. Poornima Pakyaraj doing Arputam Ammal character.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X