தெருக்குரல் அறிவு என் நம்பரை பிளாக் பண்ணி இருக்காரு.. சந்தோஷ் நாராயணன் பேட்டி!

சென்னை: நீயே ஒளி இசைக் கச்சேரி நாளை நடைபெற உள்ளநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், எஞ்சாயி எஞ்சாமி பிரச்சனையால் தெருக்குரல் அறிவு என் மீது கோபமாக இருக்கிறார். எதனால், அது நடந்தது என்று அவர் தெரிந்து கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும். தற்போது அவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி இசைக் கச்சேரி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமையான நாளை நடைபெற உள்ளது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இது என்னுடைய முதல் செய்தியாளர் சந்திப்பு என்றார். சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி எனக்கானது கிடையாது.

santhosh narayanan about Therukural arivu in his neeye oli concert press meet

நீயே ஒளி இசைக் கச்சேரி: இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு மற்றும் பாதுகாப்பான இசை நிகழ்ச்சியாக இருக்கும். சாலிகிராமத்தில் சென்னை எனக்கு மிகவும் பிடித்தமான இடம் நேரு ஸ்டேடியம். இசை நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்களுக்கு நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அடிப்படைத் தேவைகளுக்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து பாடகர் அறிவு இசைக் கச்சேரிக்கு அழைக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இசைக்கச்சேரி குறித்து பாடகர் அறிவுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளேன். ஆனால் அவர் என் நம்பரை பிளாக் செய்திருப்பதால், மெசேஜை அவர் பார்த்திருக்க மாட்டார். எஞ்சாயி எஞ்சாமி பிரச்சனையால் அவர் என் மீது கோபமாக இருக்கிறார். எதற்காக அவர் இப்படி செய்தார் என்று தெரிந்தால் அனைத்தும் சரியாகி விடும் அதற்காகத்தான் நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

விஜய் அரசியல் வருகை: விஜய் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளித்த சந்தோஷ் நாராயணன், விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமீபத்தில் இந்தியாவில் மொபைல் புரட்சி ஏற்பட்டது. இதுபோல ஒரு புரட்சியாளர் வந்ததால் தொலைத்தொடர்பு உலகமே மாறியது. விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் நேர்மை அரசியலிலும் இருந்தால், அவர் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன் என்றார்.

அனைவருக்கும் வாய்ப்பு வரவேண்டும்: இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஒருவர் சினிமாவில் கூட்டணி சேர்வது குறித்து கேள்வி எழுப்பினார். சினிமாவில் கூட்டணி அமைத்த காலம் முடிந்து விட்டது, எந்த படத்திற்கு யார் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்பதை வைத்துதான் அனைத்தும் நடக்கிறது. டாப் ஐந்து இசையமைப்பாளர்களை தாண்டி அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் வாய்ப்பு வரவேண்டும் என்று நான் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X