சந்தோஷ் நாராயணன் டிவீட்.. ஏன் தெய்வமே இப்படி... .. பதறிப் போன விவேக்!

Recommended Video

தளபதி 63 படத்தின் அப்டேட்டை கேட்ட இசை அமைப்பாளர்- வீடியோ

சென்னை: தளபதி 63 படத்தின் அப்டேட்டை கேட்டு, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்விட் செய்துள்ளார். வெறுமனே அல்ல. பாடலாசிரியர் விவேக்கை ரசிகர்களிடம் மாட்டி விட்டுப் போயுள்ளார்.

ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின்போதும் முக்கிய தகவல்களை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவிடுவது தற்போது அவசிமாகியுள்ளது.

அப்டேட் தராத இயக்குனர்களையும் தயாரிப்பு நிறுவனங்களையும் ரசிகர்கள் வறுத்தெடுக்கவும் தயங்குவதில்லை. இதற்கு மிகச் சிறந்த உதாரணங்கள், என்.ஜி.கே மற்றும் விஸ்வாசம் திரைப்படங்களே.

செல்வராகவன்

செல்வராகவன்

தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த என் ஜி கே திரைப்படம், செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தள்ளிபோனது. தயாரிப்பாளரோ இயக்குனரோ படம் குறித்த எந்த வித தகவலும் தராததால், ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் பதிவித்தனர்.

சூர்யா மன்னிப்பு கேட்டார்

சூர்யா மன்னிப்பு கேட்டார்

இதனையடுத்து சூர்யா தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். தற்போது படப்பிடிப்பு முடிவு பெற்று படம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட விஸ்வாசம், சினிமா ஸ்ட்ரைக்கால் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

சிவாவுக்கும் அதே ட்ரீட்மென்ட்

சிவாவுக்கும் அதே ட்ரீட்மென்ட்

அறிவிப்போடு அடுத்த தகவல் ஏதும் வராததால், ரசிகர்கள் இயக்குனர் சிவாவை வறுத்தெடுத்தனர். தற்போது அந்த வகையில் தளபதி 63-க்கான அப்டேட் டைம் வந்துள்ளது. ஆனால் இதில் படத்தின் இயக்குநரை நேரடியாக வம்பிக்கிழுக்காமல், அதன் பாடலாசிரியரான விவேக்கை உரண்டை இழுத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இங்க நல்லா போகுது

இங்க நல்லா போகுது

விஜய் , நயன்தாரா நடிப்பில் அட்லி இயக்கும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. விவேகா பாடல்களை எழுதவுள்ளார். இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது நண்பரான விவேக்கிடம், தளபதி படத்தின் அப்டேட்டை கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இங்க நல்லா போகுது. நீங்க உடம்பைப் பார்த்துக்கங்க என்றும் உசுப்பி விட்டுள்ளார்.

ஏய்யா ஏன்

இதற்கு ‘ஏன் தெய்வமே' என விவேக் பதிலளித்துள்ளார். கூடவே வடிவேலு பட காமெடி மீமையும் போட்டு விட்டுள்ளார். விடுவாங்களா விஜய் ரசிகர்கள்.. சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து ரசிகர்களும் விவேக்கை நச்சரிக்க தொடங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X