துல்கர் சல்மானின் சல்யூட்.. இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்!

சென்னை : நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய திரைப்படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தில் இவர் இசை அமைத்த கண்டா வரச்சொல்லுங்க இணையதளத்தில் சக்கைபோடு போட்டு மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது.

இதுவரை தமிழ் திரைப்படங்களில் தனது தனித்துவமான இசையை கொடுத்து வந்தவர் இப்பொழுது முதன் முறையாக துல்கர் சல்மான் படத்திற்கு இசை அமைப்பதன் மூலம் மலையாள திரையுலகில் கால் தடத்தை பதிக்கிறார்.

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர்

நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர்

மலையாளம் ,தமிழ்,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமான நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழில் கடைசியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து இப்பொழுது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கும் வான் மற்றும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ஹே சனாமிகா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கம்பீரமான போலீஸ் யூனிஃபார்மில்

கம்பீரமான போலீஸ் யூனிஃபார்மில்

துல்கர் மலையாளத்தில் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்று வரும் நிலையில் இப்பொழுது ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் "சல்யூட்" என்ற திரைப்படத்தில் அரவிந்த் கருணாகரன் என்ற உதவி காவல் ஆய்வாளராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது தொடங்கியுள்ள நிலையில் இதன் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. அதில் துல்கர் சல்மான் கம்பீரமான போலீஸ் யூனிஃபார்மில் புல்லட்டின் மீது லத்தியை வைத்துக் கொண்டு செம ஸ்டைலிஷாக உட்கார்ந்திருக்கிறார்.

அறிமுகப் படம்

அறிமுகப் படம்

மேலும் இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை டயானா பெண்டி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணனுக்கு மலையாளத்தில் இந்த படம் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த தயாரிப்பு நிறுவனத்தின்

சொந்த தயாரிப்பு நிறுவனத்தின்

நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் சில திரைப்படங்களை தயாரித்து நடித்து வரும் துல்கர் சல்மான் சல்யூட் படத்தையும் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து இருக்க தமிழில் தனது வித்தியாசமான இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்ட சந்தோஷ் நாராயணன் இனி மலையாள படங்களில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. துல்கர் சல்மான் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X