ஒரே ஒரு ட்வீட் தான்.. ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களும் ஹேப்பி.. கர்ணன் அனைத்தும் கொடுப்பான்!
சென்னை: நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தையே எப்போ பார்க்க போகிறோம் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, சந்தோஷ் நாராயணன் போட்ட அந்த ஒரு ட்வீட் ரொம்பவே சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் கொடுத்துள்ளது.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி இந்தியளவில் பாராட்டுக்களை அள்ளிய இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு தான் கர்ணன்.
இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். கெளரி கிஷன், லால் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தனுஷின் கர்ணன்
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். கெளரி கிஷன், லால் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

அனைத்தும் கொடுப்பான்
கர்ணன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அந்த படத்திற்கு இசையமைத்து முடித்துள்ள சந்தோஷ் நாராயணன், கர்ணன் படத்தை பார்த்து மிரண்டு போயிட்டேன். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பு நிறுவனமான வி கிரியேஷனை பார்த்து பெருமைப்படுகிறேன். கர்ணன் - அனைத்தும் கொடுப்பான் என ட்வீட் போட்டு தனுஷ் ரசிகர்களை சந்தோஷ கடலில் ஆழ்த்தி உள்ளார்.

நம்பர் ஒன்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இந்த முதல் விமர்சன ட்வீட்டை பார்த்த ரசிகர்கள், இதுவரை எந்த படத்திற்கும் இப்படியொரு ட்வீட்டை நீங்க போட்டது இல்லை.. அப்போ நிச்சயம் படம் தரமாத் தான் இருக்கும் என்றும் 2021ல் கர்ணன் தான் நம்பர் ஒன் சிறந்த படமாக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆஸ்கர் விருது
அசுரன், கர்ணன் என அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷுக்கு ஆஸ்கர் அவார்டை எடுத்து வைங்கடா என அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தையே டிரெண்ட் செய்து தெறிக்கவிட்டு வருகின்றனர். நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கர்ணன் பூர்த்தி செய்வான் என்றே தெரிகிறது.
Recommended Video

மூன்று படங்கள்
2021ம் ஆண்டு தனுஷ் ஆண்டாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், ஜகமே தந்திரம், கர்ணன், அட்ராங்கி ரே என அடுத்தடுத்து இந்த ஆண்டே தனுஷின் 3 படங்கள் வெளியாக காத்திருக்கிறது என ரசிகர்கள் உச்சகட்ட சந்தோஷத்தில் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











