நான் பார்த்த படங்களில் சிறப்பான ஒரு படம்... சந்தோஷ் நாராயணன் பாராட்டு எந்த படத்துக்கு தெரியுமா?
சென்னை : இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பல வெற்றிப் படங்களில் தொடர்ந்து பாடல்கள் இசைத்து வருகிறார்.
தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சந்தோஷ் நாராயணன்.
இந்நிலையில் இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகிவரும் கடைசி விவசாயி படம் குறித்து அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மணிகண்டன்
காக்கா முட்டை படத்தை இயக்கி பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தவர் மணிகண்டன். தனுஷ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் தேசிய விருதை பெற்றதோடு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பெருமை சேர்த்தது. இந்தப் படத்தை அடுத்து ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார்.

கடைசி விவசாயி படம்
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களை கொண்டு கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ட்ரைபள் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நாளை ட்ரெயிலர் ரிலீஸ்
படத்தின் ட்ரெயிலர் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கெட்டப்புகளில் காணப்படும் நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. படத்தில் யோகிபாபு, பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Recommended Video

சந்தோஷ் நாராயணன் இசை
விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை குறித்து பேசும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் முன்னதாக இளையராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சிறப்பான படம் என பாராட்டு
இதனிடையே தான் பார்த்த படங்களிலேயே சிறப்பான ஒரு படமாக கடைசி விவசாயி படம் இருந்ததாக சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைத்ததை பெருமையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் குறித்து பேச அதிகமான விஷயங்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











