Dubai: கடைசி விமானம் நான் போன விமானம் தான்.. நடுவானில் பறக்கும் போது சந்தோஷ் நாராயணன் மனநிலை இது தான்
கத்தார்: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள், குறிப்பாக ஈரானுக்கு அருகில் உள்ள நாடுகள் கண்டனங்களை கூட்டாக வெளியிட்டு வருகிறது. இதனால் சர்வதேச அளவில் மிகப்பெரிய பதற்றம் நிலவி வருகிறது. வான்வழியை மூடுவதற்கு முன்னர் கத்தாரில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். அப்போது அவர் மனதில் என்ன தோன்றியது என்பது குறித்து விவரித்துள்ளார்.
இந்த தாக்குதல்களால் துபாய், அபுதாபி, கத்தார் போன்ற நாடுகள் அவர்களின் வாழ் வழி போக்குவரத்தை மொத்தமாக மூடிவிட்டன. இதனால் கமர்ஷியல் பயன்பாட்டுக்கான பயன்பாடு மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படி இருக்கையில் துபாயில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வீட்டில் ஏற்கனவே உள்ள பொருட்களைக் கொண்டே மறு அறிவிப்பு வரும் வரை சமாளிக்க முயற்சி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் மக்களின் மொபைல்களுக்கு எமர்ஜென்சி அலர்ட் அரசு தரப்பில் இருந்து இயல்பாகவே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அங்கிருப்பவர்கள் நமக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். மேலும் தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகளால் மிகவும் பயம் ஏற்பட்டாளும் ஐக்கிய அமீரக ராணுவம் கொடுக்கும் தெம்பு நம்பிக்கை அளிக்கிறது என்றும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் துபாய் மற்றும் அபுதாபி என இரண்டு விமான நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளதால் பெரும் பதற்றமும் ஐக்கிய அமீரகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
சந்தோஷ் நாராயணன்: ஏற்கனவே கன்னட நடிகர் விஷ்ணு மஞ்சு தான் தனது குடும்பத்துடன் வசிக்கும் துபாய் வீட்டின் மேல் ஏவுகணைகள் பறப்பதை வீடியோவாக பதிவிட்டிருந்தார். தனது குழந்தை இதனால் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டு விட்டாள் என்று எல்லாம் பதிவிட்டிருந்தார். இப்படி இருக்கும்போது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் தனது மனநிலை குறித்து விவரித்துள்ளார். அதாவது, "மத்திய கிழக்கு நாடுகளில் விமான நிலையங்கள் முழுமையாக மூடப்படுவதற்கு சற்று முன்பாக, அங்கிருந்து கிளம்பிய கடைசி விமானங்களில் ஒன்று நான் பயணிக்கும் Qatar Airways. தற்போது அமெரிக்காவை நோக்கி பறந்து கொண்டிருக்கிறேன்.

வேண்டுதல்: நடுவானில் Starlink வழியாக இணைந்ததும் முதலில் வருவது என் உறவுகளின் நினைவுதான். போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்த மண்ணில் இருக்கும் என் சகோதர சகோதரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











