தனுஷ் இந்தியாவின் சிறந்த பாப் இசை கலைஞன்…. புகழ்ந்து பாராட்டிய சந்தோஷ் நாராயணன் !
சென்னை : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.
Recommended Video
இப்படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் 18ந் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் , இப்படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனுஷை வெகுவாக பாராட்டி உள்ளார்.

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்
ஒய்நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர் டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இத்திரைப்படத்தில், தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜூன் 18ந் தேதி ரிலீஸ்
கடந்த ஆண்டு மே மாதமே இத்திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்றால் திரைப்படம் வெளியாவது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18ந் தேதி வெளியாகிறது.

கலந்துரையாடல்
இத்திரைப்படம் 18ந் தேதி வெளியாவதை முன்னிட்டு, ஜூன் 17ந் தேதி மாலை 4 மணிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வாயிலாக படக்குழுவினர் ரசிகர்களுடன் கலந்துரையாட உள்ளனர். இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது.

சந்தோஷ் நாராயணன்
விவேக் எழுதிய ரகிட ரகிட பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். தனுஷ் , தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பாடி இருந்தனர். என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி பாடலை அனிருத் பாடி இருந்தார். அதேபோல, நேத்து ஓரக்கண்ணில் என்ற பாடலை தனுஷ் எழுதியும் பாடியும் இருந்தார்.

இந்தியாவின் பாப் இசை கலைஞன்
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே படம் வெளியாவதற்கு முன்மே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இப்படத்தில் தனுஷ் பாடல் எழுதி பாடி இருப்பதற்கு சந்தோஷ் நாராயணன் அவரை வெகுவாக பாராட்டி உள்ளார் மேலும், தனுஷ் இந்தியாவின் மிகச்சிறந்த பாப் இசை கலைஞர்களில் ஒருவர் என்று புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











