'காலா' இசை எங்கேருந்து வருது..? - நாளை டீசர் ரிலீஸ்!
Recommended Video

சென்னை : 'கபாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் '2.ஓ', பா.ரஞ்சித்தின் 'காலா' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் 'காலா' படத்தை தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' மூலம் தயாரிக்கிறார்.
முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ஏற்கெனவே, 'காலா' படக்குழுவினரால் வெளியிடப்பட்ட போஸ்டர்கள் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ஆகியவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் "படத்தின் டீசருக்கான பின்னணி இசையமைக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார். படத்தின் டீசரை மார்ச் 1-ம் தேதியும் (நாளை), படத்தை ஏப்ரல் 27-ம் தேதியும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











