Don't Miss!
- News
அபிராமி.. அபிராமி.. கடைசியில் தெரிந்த உண்மை.. காட்டிக்கொடுத்த வீடியோ.. இப்ப அந்த நாத்தனாரை காணோமாமே
- Finance
தூள் கிளப்பிய பஜாஜ் குழும நிறுவனங்கள்.. எவ்வளவு லாபம் தெரியுமா?
- Sports
19வது ஓவர் வரை கெத்து காட்டிய இந்தியா.. கடைசி 6 பந்தில் 27 ரன்கள்.. ஏமனாக மாறிய ஆர்ஸ்தீப் சிங்
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரஞ்சித் கைவிட்டதால் சந்தோஷ் நாராயணனின் மார்க்கெட் சரிந்துவிட்டதா?: புதுசு புதுசா கெளப்புறாய்ங்களே!
சென்னை: 'என்ஜாய் எஞ்சாமி' பாடல் சர்ச்சை தமிழ் திரையுலகில் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
முக்கியமாக பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி பிரிந்ததன் பின்னர் பல மாற்றங்கள் நடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் தற்போதைய மார்க்கெட் நிலவரம் குறித்தும் பல தகவல்கள் வெளியாகின்றன.
யுவன்
மேஜிக்..
இளையராஜா
பாடிய
டைட்டில்
சாங்..
ஆசைகளை
தீர்த்துக்கொண்ட
கார்த்தி!

தமிழ் சினிமாவின் சூப்பர் கூட்டணி.
சினிமாவில் புதிதாக பலர் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், புதிய கூட்டணியாகவே அறிமுகமாகி, அவர்கள் அடுத்தடுத்து வெற்றிப் படங்கள் கொடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. 'அட்டகத்தி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் பா. ரஞ்சித், கூடவே இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனையும் அறிமுகப்படுத்துகிறார். இருவரும் முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கூட்டணி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டனர்.

தொட்டதெல்லாம் மாஸ் ஹிட்
பா. ரஞ்சித் - சந்தோஷ் நாராயணன் கூட்டணிக்கு, 'அட்டகத்தி' படத்தின் மூலம் கிடைத்த வரவேற்பு, 'மெட்ராஸ்' படத்திலும் தொடர்ந்தது. இந்தமுறை 'மெட்ராஸ்' சூப்பர் ஹிட் படமாகவும் கொண்டாடப்பட்டது. அடுத்தடுத்து 'கபாலி', 'காலா' 'சார்பட்டா பரம்பரை' என ரஞ்சித்தும் சந்தோஷ் நாராயணனும் செய்த மேஜிக் எல்லாமே சூப்பர் ரகம்.

சந்தோஷ் நாராயணனின் வளர்ச்சி
ரஞ்சித்துடனான கூட்டணியில் லீடுக்கு வந்த சந்தோஷ் நாராயணன், பல முன்னணி இயக்குநர்களுடனும் இணைந்தார். வெற்றிமாறனுடன் 'வடசென்னை', கார்த்தி சுப்புராஜுடன் 'பீட்சா', 'ஜிகர்தண்டா' நலன் குமாரசாமியுடன் 'சூதுகவ்வும்', 'காதலும் கடந்து போகும்', மாரிசெல்வராஜுடன் 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' என பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தார்.

என்ஜாய் எஞ்சாமி சர்ச்சை
திரைப்படங்களுக்காக சூப்பரான மெலடிகள், கபாலி, காலா படங்களில் ரஜினிக்கு மாஸ்ஸான பீஜிஎம், குத்து சாங்ஸ் என எல்லா ஜானரிலும் கலந்துகட்டிய சந்தோஷ் நாராயாணன், தெருக்குரல் அறிவுடன் இணைந்து 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை கொடுத்தார். அந்தப் பாடல் எந்தளவிற்கு ஹிட் கொடுத்ததோ, அதுக்கும் மேல் சர்ச்சைகளையும் கிளப்பியது. தொடர்ந்து அந்த சர்ச்சைகள் ரசிகர்களையே டயர்டாக்கி விட்டது.

சந்தோஷை கைவிட்ட ரஞ்சித்
முன்னதாக 'சார்பட்டா பரம்பரை' படத்தில் இடம்பெற்ற 'நீயே ஒளி' பாடலிலும் சந்தோஷ் நாராயணன் - அறிவு இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே 'சார்பட்டா பரம்பரை' படத்தோடு சந்தோஷ் நாராயணன் உடனான கூட்டணியை முறித்தார் ரஞ்சித். அவரது நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு தென்மாவும், அடுத்து விக்ரம் நடிக்கவுள்ள படத்திற்கு ஜி.வி. பிரகாஷும் இசையமைக்கின்றனர்.

மார்க்கெட் சரிந்ததா?
ரஞ்சித் கைவிட்டதால் இப்போது சந்தோஷ் நாராயணனுக்கு பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவரிடம் செல்வதில்லை எனவும் சொல்லப்படுகிறது. அதோடு, இயக்குநர்கள் தயாரிப்பாளர்கள் யார் அழைத்தாலும், சந்தோஷ் நாராயணன் தரப்பில் இருந்து செல்போனை எடுக்காமல் இருப்பதால், அவரின் மார்க்கெட் குறித்து, ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனாலும், இதிலிருந்து அவர் மீண்டு வருவார் எனவும் அவர்கள் நம்பிக்கையாகக் கூறுகின்றனர்.