சந்தோஷ் சிவனின் சர்ச்சைக்குள்ளான இனம் திரைப்படம்.. 7 வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் ரிலீஸ்!

சென்னை: சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இனம் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரைக் கதைக்களமாக கொண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் 'இனம்'.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

2014ல் ரிலீஸ்

2014ல் ரிலீஸ்

உகந்தா, கரண், சரிதா, கருணா. அனக்கி, ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் திரையிடப்பட்டது.

எதிர்ப்பும் ஆதரவும்

எதிர்ப்பும் ஆதரவும்

இப்படம் வெளியாவதற்கு முன்பே, ஒரு சில ஈழத்தமிழர் ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சிலர் படத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

எதிர்ப்புகளும் சர்ச்சைகளும்

எதிர்ப்புகளும் சர்ச்சைகளும்

படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் சிலவற்றை நீக்குவதாக உத்தரவாதம் அளித்த படக்குழு, சர்ச்சைக் காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்தது. ஆனாலும் தொடர்ந்து எதிர்ப்புகளும் சர்ச்சைகளும் எழுந்தன.

திரையரங்குகளில் நிறுத்தம்

திரையரங்குகளில் நிறுத்தம்

இதனை தொடர்ந்து படத்தின் விநியோகஸ்தரான இயக்குநர் லிங்குசாமி, படம் ரிலீஸான ஒருவாரத்திற்குள்ளேயே படத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அதன்படி மார்ச் 31ஆம் தேதி முதல் தமிழக திரையரங்குகள் அனைத்திலும் இருந்தும் இனம் திரைப்படம் நிறுத்தப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.

ஓடிடியில் ரிலீஸ்

ஓடிடியில் ரிலீஸ்

இந்நிலையில் இப்படத்தை மீண்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக படத்தின் இயக்குநரான சந்தோஷ் சிவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முதல் டேக்ஸ் ஃபிரி பிலிம்

முதல் டேக்ஸ் ஃபிரி பிலிம்

அதாவது, இனம் படத்தை பார்க்க விரும்பும் நண்பர்களுக்காக, விரைவில் ஓடிடி பிளாட்ஃபார்மில் ரிலீஸ் ஆகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் முதல் டேக்ஸ் ஃபிரி படம் என்றும் அதனை பாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் சந்தோஷ் சிவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X