சந்தோஷ் சிவன் நடித்த “மகர மஞ்சு” விரைவில் தமிழில் வெளியீடு
சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நடித்த மலையாளப் படம் தமிழில் வெளிவர இருக்கின்றது.
இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஓவியர் ரவிவர்மாவாக நடித்திருந்தார்.
2011 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ராதா மகள் கார்த்திகா இணைந்து நடித்த படம் மகரமஞ்சு.

ரவிவர்மாவின் காதல்:
இது பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மனுக்கும் அவருடைய ஓவியங்களுக்கு மாடலாக இருந்த ஊர்வசி என்ற பெண்ணுக்கும் இடையிலான காதலை மையமாக கொண்ட படம்.

கவர்ச்சிக் கன்னி கார்த்திகா:
இதில் சந்தோஷ் சிவன், ராஜா ரவிவர்மனாகவும், கார்த்திகா, ஊர்வசியாகவும் நடித்திருந்தனர். கார்த்திகாக படு கவர்ச்சியாகவும், சந்தோஷ் சிவனுடன் நெருக்கமாகவும் நடித்திருந்த படம் இது.

தமிழில் வெளியீடு:
இவர்களுடன் நித்யாமேனன், மல்லிகா கபூர், பூர்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். லெனின் ராஜேந்திரன் என்பவர் இயக்கி இருந்தார். மதுஅம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தை தமிழுக்கு கொண்டு வருகிறார்கள்.

தமிழில் “அப்சரஸ்”:
மாணக்யா பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் இதனை அப்ரசஸ் என்ற பெயரில் தமிழில் டப் செய்திருக்கிறது. வருகிற 23 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ஏற்கனவே இனம் படத்தின் மூலம் தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ள சந்தோஷ் சிவன், இந்தப் படத்தின் மூலம் அதனை சரிக்கட்ட முயற்சிப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











