Don't Miss!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- News ரூ.173.85 கோடி பறிமுதல்! இலவச பொருள்களோ 35.78 கோடி! எங்கே போகிறது தமிழ்நாடு?
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காமெடி சந்தானத்துக்கு ஜோடியான காதல் சந்தியா... நடுநடுவே பவர் ஸ்டாருக்கும்!
காதல் படத்துக்குப் பிறகு நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்த சந்தியா, திடீரென வாய்ப்புகளின்றி தவித்தார்.
வேறு வழியின்றி தாய்மொழியான மலையாளத்தில் ஒரு ரவுண்ட் வர முயன்றார். ஆனால் தமிழில் கிடைத்த முக்கியத்துவம் அங்கு கிடைக்கவில்லை.
நிறைய தமிழ்ப் படங்களில் தோழி, குணச்சித்திர வேடங்களுக்கு சந்தியாவை அழைத்தனர். அவர் மறுத்து வந்தார்.
ஆனால் இப்போது வேறு வழியின்றி, 'யா யா' என்ற படத்தில் ஒரு வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். அது... காமெடியன் சந்தானத்துக்கு ஜோடி!
அதுமட்டுமல்ல... இந்தப் படத்தில் சந்தானத்தையும், அவர் ஜோடி சந்தியாவையும் நக்கலடிக்கும் வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசனும் நடிக்கிறார். நடுநடுவே அவரும் கிட்டத்தட்ட ஜோடி எனும் அளவுக்கு தொட்டுக் கொள்வாராம் சந்தியாவை.
ஆரம்பத்தில் இந்த வேடத்தில் நடிப்பதா என்ற மனப்போராட்டம் இருந்தது. ஆனால் அந்தக் காட்சிகள் பெரிதாக பேசப்படும் என்பதால் ஒப்புக் கொண்டேன், என்கிறார் சந்தியா.