நின்னு கோரி வர்ணம்.. சில்ற இல்லபா.. இவங்களே கலாய்ச்சுக்கிட்டா அப்புறம் நாம எதுக்கு?
சென்னை: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்பவுமே யாராவது பிரபலங்கள் சிக்கி விட்டால் போதும் கலாய்த்துத் தள்ளி விடுவார்கள். ஆனால் பிரபலங்கள் அவர்களாகவே கலாய்த்துக் கொண்டால் என்ன செய்வது.
அப்படி ஒரு கலகலப்பு தற்போது நடந்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜும் நல்ல நண்பர்கள். இருவரும் பீட்ஸா, ஜிகர்தண்டா என இரு பெரும் ஹிட்களைக் கொடுத்தவர்கள்.

கார்த்திக் சுப்புராஜன் ஆரம்ப கால கேரியர் சிறப்பா அமைய சந்தோஷின் இசையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்த நிலையில் சந்தோஷ் நாராயன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவரும் கார்த்திக் சுப்புராஜும் உள்ளனர். வித்தியாசமான போஸாக அது உள்ளது. அதை வைத்து அவர் கலாய் செய்துள்ளார்.
அந்த வசனம் இதுதான். நான்: நின்னுகோரி வர்ணம்.. கார்த்திக் சுப்புராஜ்: சில்ற இல்லப்பா.. என்று வசனம் போட்டுள்ளார் சந்தோஷ் நாராயணன். இந்த டிவீட்டைப் பார்த்து அவரது நண்பர்கள் ரசிர்கள் சிரியோ சிரியென்று சிரித்துக் கொண்டுள்ளனர். கமெண்ட்டுகளும் குவிந்து கொண்டுள்ளன.
சரி, இப்படி நீங்களே கலாய்ச்சுக்கிட்டா பிறகு நாங்கெல்லாம் எதுக்கு என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது.. நாம கேட்கலைங்க.. மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கேக்குறாங்க!


Click it and Unblock the Notifications











