60வது படம்... ரஜினி பட இசையமைப்பாளரைப் பிடித்த விஜய்!
விஜய்யின் 60 வது படம் குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினசரி வர ஆரம்பித்துவிட்டன.
இந்தப் படத்தை அழகிய தமிழ் மகன் படத்தைத் தந்த இயக்குநர் பரதன் இயக்குவது தெரிந்த செய்தி.

படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்ற சுவாரஸ்யமான கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது. இப்போது ரஜினியின் கபாலி படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்தான் இந்தப் படத்துக்கு இசையமைக்கப் போகிறாராம்.
முதலில் இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று கூறி வந்தனர். இப்போது தமிழ் சினிமாவின் பரபரப்பான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் கேரியரில் கபாலி அவருக்கு மிகப் பெரிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் விஜய் 60 பட வாய்ப்புக் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











