அட போங்கய்யா.. ’தளபதி 65’ அந்த படத்தின் பார்ட் 2 இல்லையாம்.. திடீர் பல்டி அடித்த ஒளிப்பதிவாளர்!
சென்னை: துப்பாக்கி 2 படம் உருவாகப் போவதாக தான் எந்தவொரு சிக்னலையும் கொடுக்கவில்லை என ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கூறியுள்ளார்.
Recommended Video
நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாகவும், துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகம் என்றும் தகவல்கள் வெளியாகின.
மேலும், அந்த படத்திற்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதை அவரே சமீபத்தில் ஒப்புக் கொண்டு விஜய் ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

பக்கா கமர்ஷியல்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக இணைந்த படம் துப்பாக்கி. ராணுவத்தில் இருந்து விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வரும் ராணுவ அதிகாரி ஜகதீஷ், ஸ்லீப்பர் செல்களையும், அதன் தலைவனையும் கண்டறிந்து எப்படி காலி செய்கிறான் என்கிற பக்கா கமர்ஷியல் கதையை மாஸ் படமாக முருகதாஸ் இயக்கி இருப்பார்.

இயக்குநர் யார்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் மாஸ்டர் படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ள நிலையில், தளபதி விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்றும் ‘தளபதி 65' படத்தை இயக்கப் போகும் இயக்குநர்கள் என ஒரு டஜன் இயக்குநர்கள் பெயர் பட்டியலே செய்திகளாக வெளியாகின.

சுதா கொங்கரா
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை இயக்கி உள்ள இறுதிச்சுற்று இயக்குநர் சுதா கொங்கரா தான் ‘தளபதி 65' படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல்கள் உறுதியானது மாதிரி வைரலானது. ஆனால், அதனை சுதா கொங்கரா தரப்பும் நடிகர் விஜய் தரப்பும் திட்டவட்டமாக மறுத்து விட்டது.

இவர் தான்
இந்நிலையில், கடைசியாக ‘தளபதி 65' படத்தை இயக்குநர் முருகதாஸ் தான் இயக்கப் போகிறார் என்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இசையமைப்பாளர் தமன் அந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கி 2 படத்தை தான் முருகதாஸ் இயக்க உள்ளார் என்றும் ஜூன் 22ம் தேதி அதன் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.

டிவிஸ்ட்
தளபதி ரசிகர் ஒருவர் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம், ஐ எம் வெயிட்டிங் என பதிவு போட்டு, துப்பாக்கி 2 படம் தான் என்பதை ரிவீல் செய்ததற்கு நன்றி என டிவீட் போட, உடனடியாக சந்தோஷ் சிவன் பதறிப்போய், நான் மற்ற படங்களை வைத்தும் கமெண்ட் போட்டுத் தான் வருகிறேன். நான் எந்தவொரு க்ளூவும் கொடுக்கவில்லை என மறுத்துள்ளார்.

வேற ஸ்டோரி
சந்தோஷ் சிவன் இப்படி பதறிப்போய் பல்டி அடித்துள்ள நிலையில், அந்த கமெண்ட்டுக்கு கீழே ரசிகர்கள், அப்படியென்றால் துப்பாக்கி 2 அல்ல இது வேறு கதை என்பதை பதிவு செய்றீங்க அப்படித்தானே என பதிலுக்கு கமெண்ட் செய்து அவரை வம்பில் மாட்டி விட்டு இருக்கின்றனர். எது எப்படியோ, தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று உண்மை வெளியாகிவிடும் அதுவரை வெயிட்டிங்கில் இருப்போம்.


Click it and Unblock the Notifications











