ட்வீட்டில் நாய் போட்டோ: தயாரிப்பாளர்கள் குறித்து சர்ச்சையை கிளப்பிய சந்தோஷ் சிவன்

சென்னை: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய திரையுலகின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்பவர் சந்தோஷ் சிவன். இவரின் ஒளிப்பதிவில் செக்கச் சிவந்த வானம் திரைப்படம் அடுத்ததாக ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

Santosh Sivan controversial Santosh Sivan controversial tweet! tweet!

இந்த நிலையில், ஒரு நாயின் புகைப்படங்களை பதிவிட்டு தயாரிப்பாளர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஒரு புகைப்படத்தில், நாய் கோபமாக குரைப்பது போலவும், அதே நாய் மற்றொரு புகைப்படத்தில் புன்னகை ததும்பும் முகத்துடன் அமைதியாக இருப்பது போலவும் உள்ளது.

அதில், கோபமாக குரைக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே, " தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கும் போது" என்றும், அமைதியாக புன்னகையோடு இருக்கும் நாயின் புகைப்படத்திற்கு மேலே " தயாரிப்பாளர் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்கும் போது" என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

பொதுவாக தயாரிப்பாளர்கள் கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுக்க தயங்குவதில்லை. ஆனால் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் மட்டும் கடிந்துகொள்கின்றனர் என்ற கருத்தைச் சொல்ல சந்தோஷ் சிவன் இந்த யுக்தியைக் கையாண்டிருக்கிறார்.

இது திரையுலகினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷ் சிவனின் இந்த செயலுக்கு தயாரிப்பாளர் தேனப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் அடுத்ததாக நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X