பேரதிர்ச்சி.. சந்தோஷ் சிவனின் தந்தையும் தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளருமான சிவன் காலமானார்

திருவனந்தபுரம்: தேசிய விருது வென்ற பழம்பெரும் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநரான சிவன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

தளபதி, ரோஜா, துப்பாக்கி, தர்பார் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை தான் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தையின் மறைவு குறித்து சந்தோஷ் சிவன் அறிவித்துள்ள நிலையில், ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

சந்தோஷ் சிவனின் தந்தை

சந்தோஷ் சிவனின் தந்தை

தளபதி, ரோஜா, இருவர், ராவணன், துப்பாக்கி, அஞ்சான் மற்றும் தர்பார் உள்ளிட்ட ஏகப்பட்ட தமிழ்ப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.

3 தேசிய விருதுகள்

3 தேசிய விருதுகள்

1959ம் ஆண்டிலேயே கேரளாவின் திருவனந்தபுரத்தில் சிவன் ஸ்டூடியோஸை நிருவியவர் சந்தோஷ் சிவனின் தந்தை. பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான இவர் மூன்று முறை தேசிய விருதுகளையும் வென்றுள்ளார். மேலும், அபயம், யாகம், கொச்சு கொச்சு மோகங்கள், கிள்ளிவதில், கேஷு, ஒரு யாத்ரா உள்ளிட்ட பல பிரபல படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது குழந்தை

இரண்டாவது குழந்தை

கோபால பிள்ளை மற்றும் பவானியம்மா தம்பதியினருக்கு ஒளிப்பதிவாளர் சிவன் இரண்டாவது குழந்தையாக பிறந்தார். மொத்தம் அந்த தம்பதியினருக்கு 6 குழந்தைகள். ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் கலக்கிய சிவனுக்கு இரு மகன்கள் சங்கீத் சிவன் மற்றும் சந்தோஷ் சிவன் இருவருமே திரைத்துறையில் தந்தையை போலவே ஜாம்பவான்களாக திகழ்கின்றனர்.

சோகத்தில் சந்தோஷ் சிவன்

சோகத்தில் சந்தோஷ் சிவன்

மாரடைப்பு காரணமாக தனது தந்தை மறைந்து விட்டார் என்கிற சோக செய்தியை இயக்குநர் சந்தோஷ் சிவன் உறுதிப்படுத்தி உள்ளார். தந்தையின் மறைவால் பேரதிர்ச்சியில் சந்தோஷ் சிவனின் குடும்பம் மட்டுமின்றி மலையாள சினிமா உலகமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தை சிவன் உயிரிழந்த செய்தியை அறிந்த மலையாள திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் Rest in Peace Sivan Uncle என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X