மாநகரம் ரீமேக்.. சந்தோஷ்சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இந்தி படத்துக்கு இதுதான் டைட்டில்

By

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் 'மாநகரம்' இந்தி ரீமேக்கின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கி இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்

பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்

இந்தப் படம் பொங்கலன்று வரும் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லோகேஷ் கனகராஜ், இயக்குனராக அறிமுகமான படம், 'மாநகரம்'. அதில், ஸ்ரீ, சந்தீப் கிஷன், ரெஜினா, சார்லி, மதுசூதனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரித்து இருந்தனர்.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

2017-ம் ஆண்டு இந்தப் படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்துக்குப் பிறகுதான் அவர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். அந்தப் படமும் ஹிட்டானது. கைதி படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

இந்தியில் மாநகரம்

இந்தியில் மாநகரம்

அஜய்தேவ்கன், கார்த்தி நடித்த கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இவர் புலி, இருமுகன், சாமி ஸ்கொயர் படங்களை தயாரித்த மலையாளத் தயாரிப்பாளர்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

ஒரு ஹீரோவாக விக்ராந்த் மாசே நடிக்கிறார். மற்றொரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் இந்திப் படம் இது. தன்யா, சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரி, சச்சின் கெடேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். வரும் 10 ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் தொடங்குகிறது.

மும்பைகர் டைட்டில்

மும்பைகர் டைட்டில்

இதற்கிடையே இந்தப் படத்துக்கு 'மும்பைகர்' என்று டைட்டில் வைத்துள்ளனர். அதை பிரபல இயக்குனர் கரண் ஜோஹர், ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்கிற விவரத்துடன் இந்த டிசைன்
வெளியாகி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X