கார் விபத்தில் நடிகை சனுஷா மரணம் அடைந்ததாக வதந்தி

By Siva

திருவனந்தபுரம்: கார் விபத்தில் நடிகை சனுஷா இறந்துவிட்டதாகக் கூறி போட்டோ ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது.

ரேணிகுண்டா, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளவர் கேரளாவை சேர்ந்த சனுஷா. அவர் தற்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு அவர் சாண்டல்வுட்டிலும் அறிமுகம் ஆனார்.

விபத்து

விபத்து

கார் விபத்தில் சிக்கி சனுஷா இறந்துவிட்டதாக வதந்தி ஒன்று சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. மிகுந்த சேதமடைந்த கார் புகைப்படம் வைரலாகியுள்ளது.

சனுஷா

சனுஷா

விபத்து செய்தி குறித்து அறிந்து பலரும் சனுஷாவுக்கு போன் செய்ய அவர் அதிர்ச்சி அடைந்துவிட்டார். தான் இன்னும் உயிரோடு இருப்பதை உலகிற்கு உறுதி செய்ய அவர் இன்று ஃபேஸ்புக் லைவில் பேச உள்ளாராம்.

வதந்தி

வதந்தி

மரண வதந்தியில் ஒரு திரையுலக பிரபலம் சிக்குவது இது முதல் முறை அல்ல. அமிதாப் பச்சன், அஜீத், ஆர்யா என பல நட்சத்திரங்கள் பற்றியும் இந்த மரண வதந்தி பரவியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் ஒரு முறை ரஜினிகாந்த் பற்றி கூட வதந்தி பரவியது.

புகார்

உயிரோடு இருப்பவர் பற்றி இப்படியா வதந்தி பரப்புவது என சனுஷாவின் பெற்றோர் கோபம் அடைந்துள்ளனர். வதந்தி பரப்பியவர்கள் மீது அவர்கள் போலீசில் புகார் செய்ய உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X