தீபிகா படுகோனேவை தொடர்ந்து நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் விசாரணைக்கு ஆஜர்
மும்பை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணையில் நடிகை தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட மூன்று முன்னணி நடிகைகள் என்சிபி அதிகாரிகள் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராக அவர்கள் வந்த நிலையில், எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
Sara என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

நடிகைகளுக்கு சம்மன்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலிவுட்டில் புழங்கும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னணி நடிகைகளான தீபிகா படுகோனே, சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு என்சிபி சம்மன் அனுப்பியது.

தீபிகா ஆஜர்
கோவாவில் இருந்து விளம்பர ஷூட்டிங்கை பாதியிலேயே அவசர அவசரமாக நிறுத்திவிட்டு, கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை திரும்பிய நடிகை தீபிகா படுகோனே, இன்று காலை என்சிபி அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜர் ஆனார். தீபிகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகின.

சாரா அலி கான்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளும் இளம் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கானும் இன்று என்சிபி அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். சுஷாந்த் சிங்கின் கேதார்நாத் படத்தில் அறிமுகமான இவருக்கும், சுஷாந்துக்கும் காதல் ஏற்பட்டதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் முன்னதாக தெரிவித்திருந்தன.

ஷ்ரத்தா கபூர்
பீச் ரெசார்ட் ஒன்றில் நடந்த போதைப் பார்ட்டியில் நடிகை ஷ்ரத்தா கபூரும் கலந்து கொண்டதாக அவரும் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளார். ரியா சக்கரவர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேனேஜரிடம் நடத்திய விசாரணையின் பேரிலேயே இவர்களின் பெயர்கள் சிக்கியதாக தெரிகிறது. ஷ்ரத்தா கபூரும் தற்போது விசாரணைக்காக வந்துள்ளார்.

எப்படி நடக்கிறது விசாரணை
என்சிபி அலுவலகத்திற்கு இன்று ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகைகளும் ஆஜராகி உள்ள நிலையில், மூவரிடமும் ஒன்றாக விசாரணை நடைபெறுகிறதா? அல்லது தனித்தனியாக விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பாலிவுட் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

எதிர்ப்பும் ஆதரவும்
ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாலிவுட் படங்களை கொடுத்த நடிகைகள் இப்படி போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி உள்ள நிலையில், அவர்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. #StandwithDeepikaPadukone என்றும் Sara என்றும் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











