இது எப்படின்னு தெரியலையே.. சமூக வலைத்தளங்களில் லீக் ஆன தனுஷ் பட ஹீரோயின் லுக்.. படக்குழு ஷாக்!

By

சென்னை: தனுஷ் படத்தின் ஹீரோயின் லுக் இணையதளத்தில் லீக் ஆனதால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

Recommended Video

Dhanush's 'Thirudhan Police' movie poster goes viral | Lock Down

நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்ஜனா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை இயக்கியவர் ஆனந்த்.எல்.ராய்.

இவர் 'தனு வெட்ஸ் மனு' உட்பட சில இந்தி படங்களை இயக்கியுள்ளார். இவர், தனுஷ் நடிப்பில் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.

சாரா அலிகான்

சாரா அலிகான்

அட்ரங்கி ரே என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் தனுஷூடன், அக்‌ஷய் குமார், பாலிவுட்டின் இளம் ஹீரோயின் சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். பூஷன்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிமன்ஷு சர்மா கதை எழுதியுள்ளார். ஷூட்டிங் கடந்த ஒன்றாம் ஆம் தேதி தொடங்கியது.

அக்‌ஷய்குமார்

அக்‌ஷய்குமார்

இந்தப் படம் தொடர்பான அறிவிப்பும் தனுஷ், அக்‌ஷய், சாரா ஆகியோரின் புகைப்படங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் நடிக்க அக்‌ஷய் குமாருக்கு ரூ.120 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதில் சாரா அலிகான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

இதற்கிடையே இந்தப் படத்தில், சீனியர் ஹீரோக்களான அக்‌ஷய் குமார், தனுஷுடன் நடிப்பது ஏன் என்று நடிகை சாரா அலிகான் சமீபத்தில் விளக்கம் அளித்தார். 'ஸ்கிரிப்டை படித்தபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அழுத்தமான கேரக்டர். என்னால் அப்படி நடிக்க முடியுமா? என்று சந்தேகம் இருந்தது. பிறகு இது சவால்தான். செய்வோம் என்று சம்மதித்தேன். என்னுடன் நடிக்கும் அக்‌ஷய்குமார், நான் ரசிக்கும் நடிகர். தனுஷ், சிறந்த நடிகர்' என்று கூறியிருந்தார்.

டிராக்டரில் சாரா

டிராக்டரில் சாரா

இதன் முதல் ஷெட்யூல் கடந்த மாதம் தொடங்கி சில நாட்கள் நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டிராக்டரில் சாரா அலிகான் அமர்ந்து இருப்பது போன்ற அந்த ஸ்டில் எப்படி லீக் ஆனது என்று தெரியாமல் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மதுரை மற்றும் பீகாரில் நடக்க இருக்கிறது. அடுத்த வருடம் காதலர் தினத்துக்கு படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X