முதல் பட ஷூட்டிங்கே முடியல.. அடுத்த படத்தில் கமிட் ஆன வாரிசு நடிகை!
Recommended Video

மும்பை : உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கை மையமாக வைத்து பாலிவுட்டில் அபிஷேக் கபூர், 'கேதர்நாத்' என்ற படத்தை இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
பிரபல இயக்குநர் அஸ்தோஷ் கவுரிகர் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கேதார்நாத்
வட இந்திய மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழை பொழிந்ததால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளப்பெருக்கால் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர். இந்தச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் 'கேதார்நாத்' படம் உருவாகிறது.

சாரா அலிகான்
'தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி' படத்தில் கிரிக்கெட் வீரர் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் இந்தப் படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் நாயகியாக அறிமுகமாகிறார். ஏக்தா கபூர், கிரிராஜ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஷூட்டிங் முடிவதற்குள்
சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான், தனது முதல் படமான 'கேதார்நாத்' படப்பிடிப்பு முடியும் முன்னரே இன்னொரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல இயக்குநர் அஸ்தோஷ் கவுரிகர் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் சாரா அலிகான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறாராம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சமீபத்தில் அஸ்தோஷ் அலுவலகத்துக்கு சாரா வந்திருந்தாராம். இதன்மூலம் அவரின் அடுத்த படத்தில் சாரா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











