அப்பா போலவே.. சைஃப் அலி கானுடன் சுஷாந்த் சிங்கை ஒப்பிட்ட சாரா அலி கான்.. கடைசியாகவும் ஒரு ஒற்றுமை!
மும்பை: தில் பேச்சாரா படத்தின் ரிலீசுக்கு பிறகு உருக்கமான போஸ்ட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சாரா அலி கான் போட்டுள்ளார்.
Recommended Video
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் மூலம் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் சாரா அலி கான்,
இவர் பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அழுகையும் கொண்டாட்டமும்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தில் பேச்சாரா படம் நேற்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும், நேற்று நள்ளிரவு முதலே படத்தை கொண்டாடியும், சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவுக்கு வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

கேதார்நாத் ஜோடி
இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் மூலம் திரையுலகுக்கு நடிகையாக அறிமுகமான சாரா அலி கான், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். சுஷாந்த் சிங் மறைவுக்கு நெப்போடிசம் காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சாரா அலி கானின் இந்த பதிவு பலரையும் நெகிழச் செய்து வருகிறது.

அப்பா போலவே
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளான சாரா அலி கான், தில் பேச்சாரா படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடித்த தனது அப்பா சைஃப் அலி கான் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது தந்தையை போல பல விஷயங்களில் தொடர்புடையவர் எனக் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தி வருகிறது.

ஒற்றுமை
விண்வெளி ஆராய்ச்சி, தொலைநோக்கியை வீட்டில் வைத்துக் கொண்டு வானத்தை ஆராய்ச்சி செய்வது, Sartre, Van Gogh, கிட்டார், கிரிக்கெட், பிங்க் ஃப்ளாய்டு மற்றும் நஸ்ரத் சாப் என பல விஷயங்களில் இருவருக்கும் இடையே ஏகப்பட்ட ஒற்றுமைகள் உண்டு. கடைசி ஒப்பீடாக தில் பேச்சாரா படமும் இருவரையும் இணைத்து வைத்து இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

தனுஷுக்கு ஜோடி
பாலிவுட்டின் இளம் ஹாட் ஹீரோயினாக வலம் வரும் நடிகை சாரா அலி கான், அடிக்கடி பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். மேலும், இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய குமார், தனுஷ் நடிக்கவுள்ள அட்ரங்கி ரே படத்திலும் இவர் தான் ஹீரோயின். கடந்த பிப்ரவரி மாதம் படத்திற்கான பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











