சுப்மன் கில் உடன் சாரா அலி கான் காதலா? பாலிவுட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் அப்படியொரு கனெக்‌ஷன்!

மும்பை: பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா மற்றும் ரிஷப் பண்ட் இடையேயான மோதல் சமீபத்தில் ரசிகர்களை செம ஷாக் ஆக்கியது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சையும் ஊர்வசி ரவுத்தேலா வந்து பார்த்ததை வைத்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை பலரும் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில், பாலிவுட் நடிகை சாரா அலி கான் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லை காதலிக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா

பாலிவுட் நடிகைகளுக்கும் கிரிக்கெட் வீரர்களுக்கும் ஏகப்பட்ட கனெக்‌ஷன்கள் இருப்பதாக பல செய்திகள் வலம் வந்தாலும் கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா திருமணம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராத் கோலியை தொடர்ந்து ஏகப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிகைகள் பின்னால் சுற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா

ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா

ரிஷப் பண்ட் மற்றும் ஊர்வசி ரவுத்தேலா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் பின்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் ரூமர்கள் கிளம்பின. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே வெடித்த மறைமுக மோதல் சோஷியல் மீடியாவையே அல்லோகலப்படுத்தி விட்டது. இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வச்சு செய்து விட்டனர்.

சாரா அலி கான் - சுப்மன் கில் டேட்டிங்

சாரா அலி கான் - சுப்மன் கில் டேட்டிங்

தனுஷின் அட்ரங்கி ரே படத்தில் நடித்த பாலிவுட் நடிகை சாரா அலி கான் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடன் உணவகம் ஒன்றில் உணவு சாப்பிடும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது. சாரா அலி கான் சுப்மன் கில் இருவரும் டேட்டிங் செய்து வருகின்றனரா ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்களா என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

டிரெண்டிங்கில் சாரா அலி கான்

டிரெண்டிங்கில் சாரா அலி கான்

#SaraAliKhan என்கிற ஹாஷ்டேக்கில் சாரா அலி கான் மற்றும் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகைகள் பலரும் கிரிக்கெட் வீரர்களை காதலித்து வருவது ஒன்றும் புதிதல்ல என்றும் புது ஜோடி சிக்கிடுச்சு என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X