முன்னாள் காதலரை பார்த்தும் பார்க்காதது போன்று ஓடிய வாரிசு நடிகை

By Siva

மும்பை: பட நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் காதலரை பார்த்த வாரிசு நடிகை கண்டும் காணாதது போன்று இடத்தை காலி செய்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கானின் மகள் சாரா பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். அவர் நடிப்பில் வெளியான கேதர்நாத், சிம்பா ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன.

சாரா நடிப்பதற்காகவே பிறந்துள்ளார் என்று முதல் படத்திலேயே நல்ல பெயர் எடுத்துவிட்டார்.

சாரா

சாரா

சாரா நடிக்க வருவதற்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் வீர் பஹாரியாவை காதலித்தார். நான் இதுவரை வீரை மட்டுமே காதலித்துள்ளேன். எனக்கு வேறு எந்த பாய் ஃபிரெண்ட்ஸும் இல்லை என்று சாரா முன்பு தெரிவித்தார்.

படம்

படம்

சாரா நடிக்க வந்த பிறகு வீருடனான காதல் முறிந்தது. இந்நிலையில் டைகர் ஷ்ராஃப், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் நடித்த ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் சிறப்பு காட்சியை காண சாரா சென்றார். அதே காட்சிக்கு வீர் பஹாரியாவும் வந்தார்.

இருக்கை

இருக்கை

பிரபலங்களுக்கான சிறப்பு காட்சியின்போது வீர் தனக்கான இருக்கையை தேடியபோது சாராவை பார்த்தார். சாராவும் வீரை பார்த்தார். ஆனால் வீரை பார்த்தும் பார்க்காதது போன்று சாரா இருந்துவிட்டார். இருவரும் ஒருவரையொருவர் தெரியாதவர்கள் போன்று நடந்து கொண்டனர்.

வீடு

வீடு

படம் முடிந்த பிறகு சாரா, அனன்யா உள்ளிட்டோர் கூட்டமாக நின்று பேசியுள்ளனர். அப்பொழுது சாரா மட்டும் அவசர, அவசரமாக கிளம்பிச் சென்றுவிட்டாார். காரணம் அந்த கூட்டத்தில் வீரும் ஒருவர். சாரா வீரை தவிர்க்கவே அங்கிருந்து கிளம்பியது அனைவருக்கும் புரிந்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X