»   »  முதல் படம் பாதியில் நின்றும் வாரிசு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்

முதல் படம் பாதியில் நின்றும் வாரிசு நடிகைக்கு அடித்தது ஜாக்பாட்

Posted By:
Subscribe to Oneindia Tamil
முதல் படம் ரிலீஸாவதற்குள் ஓவர் சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை: தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்- வீடியோ

மும்பை: நடிகர் சயிப் அலி கானின் மகள் சாராவின் முதல் படம் பிரச்சனையாகி பாதியில் நின்றுள்ள நிலையில் அவர் பெரிய படத்தின் ஹீரோயினாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் மகள் சாரா அலி கான் தாய் அம்ரிதா வழியில் நடிகையாகியுள்ளார். அவர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

முதல் படமே கிடப்பில் போடப்பட்டதும் சாரா அலி கானுக்கு அடுத்து பட வாய்ப்பு வருமா என்ற கேள்வி எழுந்தது. அவர் வேறு பட வாய்ப்பை பெற தீவிரமாக செயல்பட்டார்.

சாரா

சாரா

மசாலா படங்களை கொடுப்பதற்கு பெயர்போன இயக்குனர் ரோஹித் ஷெட்டி ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா என்ற படத்தை எடுக்கிறார். அந்த படத்தில் ரன்வீர் சிங்கின் ஜோடி சாரா அலி கான் தான்.

தீபிகா

தீபிகா

சிம்பா படத்தில் ரன்வீர் ஜோடியாக ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிக்கக்கூடும் என்று கூறப்பட்டது. ஏன் ரன்வீரின் காதலி தீபிகா படுகோனே நடிப்பார் என்று கூட செய்திகள் வெளியாகியன. இறுதியில் சாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஜாக்பாட்

ஜாக்பாட்

முதல் படம் கிடப்பில் போடப்பட்டாலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளார் சாரா. தீபிகாவுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம்.

அறிமுகம்

அறிமுகம்

சிம்பா படத்தை கரண் ஜோஹார் தயாரிக்கிறார். படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. சாரா அலி கானை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு அபிஷேக்கிடம் இருந்து கரணுக்கு சென்றுள்ளது.

English summary
Even before her debut film 'Kedarnath' hits the marque, Sara Ali Khan has bagged her second film. This time, we would get to see her romance Ranveer Singh on the big screen in Rohit Shetty's Simmba.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X