Cannes 2023 : இன்று தொடங்கியது கேன்ஸ் திரைப்பட விழா.. சிவப்பு கம்பளத்தை அலங்கரித்த நடிகைகள்!
பிரான்ஸ் : 76வது கேன்ஸ் திரைப்பட விழா இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் பாலிவுட் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரான்ஸில் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழா தான் கேன்ஸ் திரைப்பட விழா.
இந்த விழா இன்று மே 17ந் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கேன்ஸ் 23 : உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 2023 பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் இந்தி என உலகின் பல்வேறு மொழிகளில் உள்ள ஆவணப்படம் மற்றும் படங்கள் திரையிடப்படவுள்ளன. மொத்தம் 600க்கும் மேற்பட்ட படங்கள் இதில் திரையிடப்பட உள்ளன.
3 இந்திய படங்கள் : இந்தியாவில் இருந்து அனுராக் காஷ்யப் இயக்கிய 'கென்னடி' படம் மிட்நைட் ஸ்கீரினிங் பிரிவிலும், ராகுல் ராய் நடித்த 'ஆக்ரா' படம் ஃபோர்ட்நைட் பிரிவிலும் மற்றும் மணிப்பூரில் 1990 ஆம் ஆண்டு வெளியான 'இஷானோ' படம் ப்ரஸ்டீஜியஸ் கேன்ஸ் கிளாசிக் பிரிவிலும் 3 படங்கள் திரையிடப்படவுள்ளன.

11 பேர் கொண்ட குழு : உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் ஃபேஷன் சகோதரர்கள் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் மத்திய செய்தி ஒலிரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் முருகன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுள்ளன. இதில் இணையமைச்சர் முருகன் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டார்.

பாலிவுட் நடிகை : திரைப்பிரபலமான மனுஷி சில்லர், ஈஷா குப்தா மற்றும் சாரா அலி கான், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஊர்வசி ரவுதெல்லா போன்ற நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராதனாவுடன் வந்திருந்தார். இதில் சாரா அலி கான் லெஹங்காவில் அழகாக ஜொலித்தார். ஈஷா குப்தா வெள்ளை நிற கவுனில் ரெட் கார்பெட்டில் நடந்து வந்தார்.



Click it and Unblock the Notifications











