தனுஷ் பட ஹீரோயின், குடும்பத்துடன் கொரோனா டெஸ்ட்.. டிரைவருக்கு பாசிட்டிவ்.. நடிகை திடீர் போஸ்ட்!

By

மும்பை: தனுஷ் பட ஹீரோயின் குடும்பத்துடன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவர் டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

மும்பையிலும் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது, மகாராஷ்ட்ர அரசும் மும்பை மாநகராட்சியும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.

நடிகர் அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன்

பிரபல இந்தி நடிகை ரேகா வீட்டு செக்யூரிட்டிக்கு கொரோனா வந்த நிலையில், அவரது பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டது. அவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இது பரபரப்பாகி இருந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகளுக்கும் இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து சினிமா, அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வேண்டி ட்வீட் செய்தனர். அவர்களுக்கு அமிதாப்பச்சன் நன்றி தெரிவித்திருந்தார்.

நடிகை சாரா அலிகான்

நடிகை சாரா அலிகான்

இந்நிலையில், மும்பையில் உள்ள சினிமா பிரபலங்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். பிரபல இளம் நடிகை சாரா அலிகான், தனது குடும்பத்துடன் இந்த பரிசோதனையை நேற்று செய்துகொண்டார். அவருக்குப் பாதிப்பில்லை என்ற நிலையில், அவரது டிரைவருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள சாரா அலிகான், எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்றுப் பாதிப்பில்லை. டிரைவருக்கு பாசிட்டிவ் என்று வந்ததால் அவர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்கிறோம். உதவிக்கும் வழிகாட்டுதலுக்கும் மும்பை மாநகராட்சிக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக, விழிப்போடு இருங்கள் என்று கூறியுள்ளார்.

Recommended Video

Dhanush Heroine Weight Loss Journey • Sara Ali Khan | Strange Re, Love Aaj Kal, Simba
தனுஷ் ஜோடியாக

தனுஷ் ஜோடியாக

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள், சாரா அலிகான். கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக அறிமுகமானார். தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா உட்பட சில படங்களில் நடித்த அவர், இப்போது, அட்ரங்கி ரே என்ற படத்தில் நடிக்கிறார். இதில், தனுஷ், அக்‌ஷய்குமார் நடிக்கின்றனர். ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். ஏ.அர்.ரகுமான் இசை அமைக்கிறார். லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X